அனுபவம்

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 17)

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆஸ்திகம், நாஸ்திகம் ஆகிய இரண்டுமே கலந்திருக்கின்றன என்பதை அறிஞர் கோவிந்தசாமி உரையாடல் வழியே உணரமுடிகிறது. இது மறுக்க முடியாத உண்மையும்கூட. இருவருக்கும் நடைபெறும் உரையாடலை வாசிக்கும் பொழுது எனக்குச் சிரிப்புத் தோன்றியது. மனித மூளையில் தூசிப் படிந்த சில பகுதிகள் இருக்கும். அதைத் தன் எழுத்து என்னும் துடைப்பான் கொண்டு துடைக்கிறார் பா. ராகவன் அவர்கள். அவனுக்கு இறுதி வரை அவன் விரும்பிய பஜ்ஜி கிடைக்காதது வருத்தமே.
கோவிந்தசாமிக்குக் கவிதை என்பது அவன் உடலில் உள்ள அங்கம் போன்றுதான் போல. அங்கத்தில் நோவு ஏற்பட்டால் தாங்க இயலாதது போன்று அவன் எழுதிய கவிதையை நிழல் பழித்ததும் கோபம் வருகிறது. அந்தக் கவிதையைவிட ‘பேரிகை’ இதழுக்கு எழுதிய கவிதை சற்று வாசிக்கும் படியாகத்தான் உள்ளது.
காதலர் தினத்தைத் தனக்கு ஏற்றாற்போல உருமாற்றும் செய்த கோவிந்தசாமிக்கு

வாழ்த்துகள்

. வடக்கத்தித் தலைவர் கூறியதைத் தனக்கு ஏற்றாற்போல மாற்றம் செய்த வல்லவன் கோவிந்தசாமி அறிவுக் கூர்மையைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். காதல், சமுதாயம், கொண்டாட்டம் இன்ன பிறவற்றையும் கலந்தே இதில் கொடுத்துள்ளார் பா. ராகவன் அவர்கள்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி