அதிக நேரம் அழுததால் சக்தி குறைந்து கண்ணீரும் இல்லாமல் அழுவதை நிறுத்துகிறான் கோவிந்தசாமி. இவ்வளவு நேரம் அழுததால் சூடாகக் காப்பி வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் சட்டெனக் காபி வேண்டாம், தனக்கு தேநீர் வேண்டும் என்று அவனை மாற்றிக் கொள்கிறான்.
அது ஏன் என்று, சிறு பிளாஷ்பேக் விரிகிறது. கல்யாணமான புதிதில் மாபல்லபுரம் சென்றிருந்த சாகரிகாவிற்கும் கோவிந்தசாமிக்கும் ஒரு டீக்கடையில் வாக்குவாதம் எழுகிறது. சாகரிகா காஃபியை விட டீ தான் சிறந்தது என்று வாதாடுகிறாள். காபியை விரும்பும் அவனது மனநிலை சங்கியின் மனநிலை என்று கூறியதும் கந்தசாமி மனம் காயப்பட்டு விடுகிறது.
நிகழ்காலம் திரும்பும் அவனது மனம் காபி முக்கியமில்லை, சாகரிகா தான் முக்கியம் எனத் தனக்கு தானே சொல்லிக் கொள்கிறான். இப்போது முகம் கழுவியதும் அவனை அழ வைத்த காதல் ஜோடி கிளம்பி சென்று இருந்ததை பார்க்கிறான். அவர்கள் கிளம்பியதை கூட அவன் கவனிக்கவில்லை.
ஒரு முறை கோவிந்தசாமி தனது கவிதையைச் சாகரிகாவிற்கு வாசித்துக் காட்டுகிறான். வாசித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். அதற்கும் சாகரிகா இதெல்லாம் கவிதையா என்று கேட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறாள். கல்லால் அடித்து விழாத கனிகளும் கவிதையால் கைப்பற்ற முடியும் என்று யாரோ சொன்னது அவனிடம் நிரந்தரமாகத் தங்கி விட்டிருந்தது.
நிறைய யோசித்த பின் தன் கையிலிருந்த இரவு ராணி மலரைத் தூர தூக்கி போட்டுவிட்டு, புதிதாய் பறித்த மலரை எதிரே வைத்துக்கொண்டு ஒரு கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையை இரவு ராணி மலரைத் தன் மூக்குக்கு நேராய் பிடித்துக்கொண்டு ஒரு மந்திரத்தைப் போல உச்சரித்து உருவேற்றுகிறான். பிறகு திருப்தியாக நடக்க ஆரம்பிக்கிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.