கோவிந்தசாமி இப்போது மந்திர தடாகத்தின் கரைக்கு வந்து சேர்கிறான். ஆனால், இரவு ராணி மலரைப் பற்றியும் அதைத் தேடி வந்ததை பற்றியும் அவன் இப்போது மறந்து விட்டிருந்தான். சாகரிகாவை அடைவது ஒன்றுதான் அவனது நோக்கமாக இருந்தது. இப்போது சாகரிகா நீல வண்ணத்தில் தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டதால் அவன் நிலைகொள்ளாமல் பரபரக்கிறான். தன் நிழலை அங்கீகரிக்க முடிந்த அவளால் தன்னை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தவிக்கிறான். முன்னைவிட இப்போது அவனுக்குச் சிறு தன்னம்பிக்கை அதிகமாய் இருந்தது. பார்க்கிற பெண்கள், பார்த்திராத பெண்கள் எல்லாம் அவனை விரும்புவதாக நினைக்கிறான். இதை வைத்துச் சரிகாவை கவரலாம் என்றும் ஆசை கொள்கிறான். அதனால் அந்த வீடியோ வெளியானதையும் நல்லது என நினைக்கத் தொடங்கிவிட்டான்.
தடாகத்தில் குளிக்கலாம் என்று எண்ணும்போது, தடாகத்திலிருந்த தண்ணீர் மேலே ஏறி அவன்மீது மோதியது. அப்பொழுதுதான் அவன் அங்கே இரவு ராணி மலர்களைக் கண்டான். அந்த மலரைக் கொண்டு சரிகாவை அடைய திட்டமிடுகிறான். அவளிடம் என்ன என்ன சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொள்கிறான். இரவு ராணி மலரை முகர்ந்தபடி சொல்ல வந்த அனைத்தையும் நினைத்துக் கொள்கிறான்.
அப்போது அங்கே காதலில் திளைத்திருக்கும் நரகேசரியையும் அதுல்யாவையும் காண்கிறான். அவர்களிடம் சிறு வாக்குவாதம் ஏற்படுகிறது. முடிவில் நரகேசரி, இரவு ராணி மலர், மூன்று மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறான். இது என்ன தனக்கு வந்த சோதனை என்று கோவிந்தசாமி மீண்டும் கலங்குகிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.