ஹரே கிருஷ்ணா!

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் சேரும் புதிய பொம்மைகளுள் எனக்குப் பிடிதது, கிருஷ்ண பாகவதர் கச்சேரிக் காட்சிகள்.

திருவிளையாடல் படத்தில் சிவாஜியே அனைத்து இசைக்கலைஞர்களாகவும் உட்கார்ந்து வாசிக்கிற ஸ்டைல்தான். ஒரு முழு கிருஷ்ணர் செட். அனைத்து கிருஷ்ணர்களும் ஏகாந்தமாகப் பாடி, வாசித்துக் களிக்கிறார்கள்.

என்ன அழகு இந்த பொம்மைகளில்!

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

7 thoughts on “ஹரே கிருஷ்ணா!”

 1. பாரா சார் நீங்கள் எழுதுவதெல்லாம் படிக்க மனசுக்கு
  சந்தோசமாக இருக்கிறது. வெறுப்பை உமிழும் எழுத்துகளை
  படித்து மண்டை காய்வதை விட எதிர்மறையான சில
  விஷயங்களை கூட விஷமம் இல்லாமல் நகைச்சுவையுடன்
  எழுதப்படும் உங்களுடைய எழுத்துக்களை படிப்பது ஆயிரம்
  மடங்கு மேல். தொடர்க உங்கள் பணி

Leave a Reply

Your email address will not be published.