கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் மீண்டும் மது விடுதியில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரின் சோகமும் ஒன்று தானெனக் கோவிந்தசாமி நிழல் சொல்கிறது, அது உண்மை தான், ஆனால், கோவிந்தசாமிக்கு உண்மைகள் கசக்க செய்கிறது. இருவரும் சற்று நேரம் புலம்பி விட்டு மது அருந்த அமர்கின்றனர். பியர் சிந்துவெளி நகரத்தின் எச்சம் என்றும் அது திராவிட பானம் என்றும் நிழல் கூறுவது அதகளம்.
கோவிந்தசாமி நிழல் ஒரு செல்பி எடுத்து “என்னை ஏமாற்றிய காதலிக்கும் நான் ஏமாற்றிய தெய்வம் சாகரிகாவுக்கும் இது சமர்ப்பணம்” என்று வெண்பலகையில் எழுதுகிறது. அதைப் பார்த்ததும் கோவிந்தசாமிக்கு. தனக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் நிழலுக்குக் கிடைத்து விட்டதாக எண்ணுகிறான். வீட்டிற்குள்ளேயே அனுமதித்திருக்கிறாளே. கோவிந்தசாமியின் நிழலோ, வீட்டிற்குள் மட்டுமல்ல தனக்கென ஒரு சமாதானமே கட்டி தர முன்வந்தாளெனக் கூறுகிறான்.
தன்னுடைய நிழலுக்குக் காட்டும் கரிசனையை கூடத் தனக்கு காட்டவில்லையே என்று ஏங்குகிறான். அப்போது நிழல் ஒரு பாட்டு பாடுகிறது, அதைக் கேட்டு “மார்லியின் புனர்ஜென்ம புத்துயிர்” சிலர் பலகையில் படம் எடுத்து வெளியிடுகின்றனர். கூட ஒரு பெண் வந்து முத்தம் கொடுத்து நிழலுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறாள்.
இப்பொழுது கோவிந்தசாமி பாட ஆரம்பித்ததும் ஒரு ஊழியன் வந்து கடை மூடுவதற்கு நேரமாகிவிட்டது, கிளம்புங்கள் என்று கூறுகிறான்.
இதையெல்லாம் வெண்பலகையில் படித்த சாகரிகா அதுவரை உறுத்திக் கொண்டிருந்த சிக்கல் மறைந்து விட்டதைப் போல் உணர்கிறாள். நிழல் மன்னிப்பு கோரிய பதிவை வைத்துக் கொண்டு, நிழலைத் தன் வசமாக்க நினைக்கிறாள். ஆனால் சில்பா கோவிந்தசுவாமி நேரடியாக எதிர்கொள்ளாமல் நிழலின் மூலமாக மோதுகிறான் என்று கூறுகிறாள்.
இதற்கிடையில் சாகரிகா மஞ்சள் புடவை மஞ்சள் ரவிக்கை அணிந்து நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் சூடிய புகைப்படம் ஒன்று வெண்பலகையில் வெளியாகிறது. இதைப் பார்த்த சாகரிகா என்ன ஆகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!