ஒரு சாதாரன காஃபி விஷயத்தில் கூட அவர்களுக்குள் சங்கடங்கள் எனில் கவிதை விஷயத்தில் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அவள் அவனை சங்கி என திட்டும்போதெல்லாம் அவன் நொந்து போயிருக்கிறான். சங்கத்துடன் தொடர்பில் இருப்பது அவ்வளவு குற்றமா என எண்ணி அவஸ்தைப்படுகிறான்.
ஏன் தேசியவாதிகள் கவிதை எழுதுவதில்லை, கவிஞனாக அறியப்பட்டவர்கள் தேசியவாதியாக இருப்பதில்லை என்ற அவனது கேள்விக்கு தமிழகஜி அருமையாக பதில் சொல்கிறார்.
உண்மையில் தேசியவாதியாக இருப்பது எவ்வளவு கொடுமை. வீட்டில் மனைவிகூட மதிப்பதில்லை எனும் போது வெளியே மற்றவர்கள் என்ன லட்சனத்துக்கு மதிப்பார்கள். அதுவும் சங்கம் என்பது எவ்வளவு புனிதமான விஷயம். அதைச் சங்கியாக்கி திட்டும் ஒரு விஷயமாகவே மாற்றி விட்டார்களே என வருத்தப்படும் அவனே அவளை கருப்பு சங்கி என திட்டுகிறான்.
எல்லாம் ஃப்ளாஷ்பேக்கில்தான். நிஜத்தில் அவன் ஒரு அழகான (?) கவிதையை அந்த மலரினுள் செலுத்தி அவளுக்காக அதை ப்ரோக்ராம் செய்துகொண்டிருந்தான். கரையில் இருந்தவர்களையும் காணோம். இனி தடையேதும் இல்லை என நினைக்கிறான். என்ன நடக்கிறதோ பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.