என்னுடைய மற்றும் பலருடைய புத்தகங்களை வெளியிட்டு வரும் மதி நிலையம் ஒருவழியாகத் தனக்கொரு இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கிறது.
தளத்தை இங்கே சென்று பார்க்கலாம்.
ஆனால் இத்தளத்தில் இப்போது காசு கொடுத்து நேரடியாகப் புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. ஏனென்று தெரியவில்லை. வேண்டிய புத்தகத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் கூரியர் அல்லது புறா மூலம் புத்தகத்தை அனுப்பிவைத்துவிடுவோம் என்று வாக்களித்திருக்கிறார்கள். வாசகர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
இங்குள்ள எனது பெரும்பாலான புத்தகங்கள் மதி நிலையத்தின் மூலம் மறு அச்சு பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது வாசகர்கள் அறிந்ததே. சென்ற வருடம் எனது குற்றியலுலகம் என்னும் உலக இலக்கியத்தைப் பதிப்பித்தவர்கள், இவ்வருடம் அன்சைஸ் என்னும் அமர காவியத்தையும் பதிப்பிக்கிறார்கள்.
இவை தவிர, தாலிபன், உணவின் வரலாறு, யானி, பாகிஸ்தான் அரசியல் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா, மாயவலை போன்ற மறு அச்சு நூல்களும் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அலைந்து திரியும் வாசகர்களின் கேரி பேக்குகளை அலங்கரிக்கும்.
மதி நிலையத்தின் கேட்லாக் ஒன்று கேட்டிருக்கிறேன். பாதி அச்சாகிவிட்டது. மீதி உள்ளவை மிக அதிக பக்கங்கள்; அச்சாக நாளெடுக்கும் என்றார்கள். உளவுத்துறை தகவலின்படி அவை அனைத்தும் சொக்கனின் புத்தகங்கள் குறித்த தகவல்கள் உள்ள பக்கங்கள்.
//மதி நிலையத்தின் கேட்லாக் ஒன்று கேட்டிருக்கிறேன்./
ஆஹா இதை யாராச்சும் கமெண்ட்ல போட்டிருந்தால் “என் இனமய்யா நீர்?” அப்டின்னு சிலாகிச்சிருப்பேன் பட் ரைட்டரு நீங்களே போட்டிருக்கும்போது….! #அவ்வ்வ்வ்வ்
எனது முதல் புத்தக கண்காட்சி (2004) விசிட்டில் இப்படி கேட்லாக் சேகரிப்பு தான் முதன்மையாக அமைந்திருந்தது என்பதை இத்தருணத்தில் தெரிவிச்சிங் 🙂