குற்றியலுலகத்தின் முகம்

அன்புள்ள பாரா,

நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு ஜீவி என்று மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் போது தோன்றியது.

உங்கள் குற்றியலுகரம் புத்தகம் பேயோனின் ஓவியத்தை அட்டையில் தாங்கி வந்ததைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. உங்களின் ரத்தினச் சுருக்க ட்விட்டர் இலக்கிய (சரி.. சரி.. கமர்ஷியல்தான்) புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான அட்டை அமையாது.

புத்தகம் வெற்றிபெற வாழ்த்துகள். பாம்புத்தைலத்தோடு சேர்ந்து நிச்சயம் வாங்கிவிடுகிறேன்.

அன்புடன்
சித்ரன்

அன்புள்ள சித்ரன்

பாம்புத்தைலம் ஆழியில் உள்ளது. என்னுடையது மதி நிலையத்தில்.  அட்டைப்படத்துக்கே இத்தனை வரிகள் செலவிட்டவர், படித்தபிறகு என்ன செய்வீர்கள் என்று எண்ணிப்பார்த்து கதி கலங்குகிறேன் 🙂

பாரா/

Share

4 comments

  • பேயோனின் “பிகாசோவுக்கு ஒரு அலோ” என்ற ஓவியமே இந்த புத்தகத்திற்கு சரியான அட்டை படமாக இருந்திருக்கும்… போகிறபோக்கில் வரையப்பட்ட அந்த ஓவியம் ஒரு ஒழுங்குடன் இருப்பது, புத்தக உள்ளடக்கத்தை பிரதிபலித்திருக்கும் என்றே தோன்றுகிறது.

  • நீங்க வரைஞ்ச படம் நல்லா இருக்கு சார்! :)))

    உங்களை ஒரு ஓவியராகவும் அறியப்படுவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

    (யப்பாடி…கெளப்பிவிட்டாச்சு!)

  • //நீங்க வரைஞ்ச படம் நல்லா இருக்கு சார்! ))
    உங்களை ஒரு ஓவியராகவும் அறியப்படுவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
    (யப்பாடி…கெளப்பிவிட்டாச்சு!)//

    வழிமொழிகிறேன்

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!