சூனியன் மற்றும் கோவிந்தசாமியின் நிழலோடு சேர்ந்து நாமும் நீல நகரத்திற்குள் நுழைந்து விட்டோம், மனிதர்களுக்கு இருப்பதை போல சூனியனுக்குள்ளும் தற்பெருமை ( நீல நகரத்தை அவனுடைய கிரகத்தோடு ஒப்பிட்டு பெருமை கொள்கிறான் ) கொள்ளும் மனோபாவம் இருக்கிறது, பல இடங்களில் சூனியனிடம் மனித உணர்வுகள் மேலோங்க ஏதோ காரணம் இருக்கும் என நினைக்கிறேன்.
நீல நகர கட்டட அமைப்புகள் மட்டும் வித்தியாசமாக இல்லை, அதில் வாழும் மக்களும் விசித்திர தோற்றங்களை கொண்டுள்ளனர். அந்நிய கிரக வாசிகள் என்றதுமே நமக்குள் ஒரு கற்பனை மேலோங்குமே, அதையெல்லாம் தாண்டி மூன்று கண்கள், பிறப்புறுப்பின் இட மாற்றங்கள் என விநோததத்திலும் விநோதமாக இருக்கிறது நீல நகரம்.
இருவருமே, ஒரு நீல நகரத்து வாசியிடம் மொழி புரியாமல் “beta எங்கமா தரானுங்க எல்லாம் மாச சம்பளம் தான்” என்ற பாணியில் முண்டியடித்து சாகரிகாவின் முகவரியை வாங்கி விடுகின்றனர். இதற்கு இடையில் நம் கோவிந்தசாமியின் நிழலோ “மணிக்கொரு முறை மங்குனி அமைச்சர்” என நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. சாகரிகாவை கண்டதும் நம் சூனியனே திகைத்து நிற்கிறான், நிழலைப் பற்றி கேட்கவா வேண்டும். அவள் முழுதாய் நீல நகரவாசியாகி விட்டிருந்தாள். (?!)
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!