விதி வழிப்படூஉம் புணை: பா. ராகவனின் ‘யதி’ – சுபஸ்ரீ

பா.ராகவனின் ‘யதி’ – 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் துறவுப் பாதையை நாடும் நான்கு சகோதரர்களின் கதை.

பேசுபொருளின் ஈர்ப்பால் எளிதாகக் கதைக்குள் ஈடுபடுத்திக் கொண்டு மூன்று தினங்களில் நிறைவு செய்ய முடிந்தது. ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அடுத்தடுத்த காலகட்டத்தில் துறவின் வெவ்வேறு பாதைகளைத் தேர்கின்றனர். அப்பாதைகளில் அவர்களை செலுத்தும் நிகழ்வுகள், திசைமாற்றிவிடும் நிமித்தங்கள், அவர்கள் சந்திக்கும் அசாதாரண நிகழ்வுகள், சித்தர்கள் என கதை விரிகிறது.

நால்வரில் இளையவனான விமலின் (விமலானந்தா) பார்வையில் கதை நகர்கிறது. நான்கு சகோதரர்கள் – நான்கு பாதைகள். கதைசொல்லி விமல் நால்வரில் இளையவன். சுதந்திரத்தை மட்டுமே தன் துறவின் இலக்காகக் கொள்பவன். சார்வாகன் போல ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கடந்து செல்பவன். அவனது பார்வையில் இங்கு மற்ற ஒவ்வொருவரின் அனுபவங்களும் விரிகின்றன. ஒவ்வொன்றையும் உற்று நோக்கும் அவனது அவதானிப்புகள் கூர்மையாக, அவனது குரு சொல்வது போல ‘மொழியின் கருவி’யான விமலால் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன.

சித்தர்களால் வழிநடத்தப்பட்டு யோகத்தைத் தன் பாதையாகக் கொண்ட முதலாமவன் விஜய் ஏதோ ஒரு வகையில் ஏனைய ஒவ்வொரு சகோதரனையும் துறவுக்கு இட்டுச் செல்பவனாகவோ, வழி மாற்றி விடுபவனாகவோ வருகிறான். துறவுக்கு முந்தைய இளமைப் பருவம் தவிர அந்தக் கதாபாத்திரத்தின் கட்டமைப்பு பெரும்பாலும் பிறரது வார்த்தைகளிலேயே நிகழ்கிறது….

யதிக்கு ஜெயமோகன் தளத்தில் ஒரு மதிப்புரை வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து எழுதிய சுபஶ்ரீக்கும் வெளியிட்ட ஜெயமோகனுக்கும் நன்றி.

பொதுவாக மதிப்புரைகளுக்கும் விமரிசனங்களுக்கும் நான் பின் இணைப்போ, பதிலோ எழுதுவதில்லை. எதையும் என் தரப்பாக நிறுவ முயற்சி செய்வதில்லை. எழுதி முடிப்பதுடன் என் பணி நிறைகிறது. படைப்பைத் தக்க வைப்பதையும் தள்ளி விடுவதையும் காலம் கவனிக்கும் என்பது என் நம்பிக்கை. எழுதி எவ்வளவோ ஆண்டுகளாகிவிட்ட பின்பும் பொருட்படுத்தி வாசித்து, அது குறித்துச் சில வரிகள் எழுதவும் வைக்கும்படியாக இச்செயல் நிகழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் எண்ணிக்கொள்கிறேன்.

மதிப்புரையை முழுவதும் வாசிக்க இங்கே செல்க.

யதி – தமிழ் விக்கி பக்கம்

யதி – கிண்டில் மின்நூல்

யதி – அச்சுப் பதிப்பு

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி