Categoryமதிப்புரை

விதி வழிப்படூஉம் புணை: பா. ராகவனின் ‘யதி’ – சுபஸ்ரீ

பா.ராகவனின் ‘யதி’ – 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் துறவுப் பாதையை நாடும் நான்கு சகோதரர்களின் கதை. பேசுபொருளின் ஈர்ப்பால் எளிதாகக் கதைக்குள் ஈடுபடுத்திக் கொண்டு மூன்று தினங்களில் நிறைவு செய்ய முடிந்தது. ஒரே வீட்டைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அடுத்தடுத்த காலகட்டத்தில் துறவின் வெவ்வேறு பாதைகளைத் தேர்கின்றனர். அப்பாதைகளில் அவர்களை செலுத்தும் நிகழ்வுகள், திசைமாற்றிவிடும் நிமித்தங்கள், அவர்கள்...

மணிப்பூர் கலவரம் – புத்தக மதிப்புரை: கார்த்திகேயன் வெங்கட்ராமன்

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் துவங்கிய பொழுது செய்தித்தாள்களில் அது தொடர்பான செய்திகளை வாசித்ததுண்டு. அப்போதெல்லாம் அந்தக் இனக் குழுவின் பெயரை எப்படி உச்சரிப்பது? மீட்டியா, மீத்தீயா? அல்லது மெய்ட்டியா என்பதிலேயே எனக்கு குழப்பம் இருந்தது. அதுபோக ஒரு குழுவுக்கு ஆதரவான மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மற்றொரு குழு போராட்டம் நடத்துகிறது என்ற அளவில்தான் எனது அடிப்படைப்...

எழுதுதல் பற்றிய குறிப்புகள் – ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

வணக்கம் பாரா. புத்தகம் உள்ளங்கை அகலத்திற்கு கச்சிதமாக இருந்தது முதல் ஆச்சர்யம். பிறகு சித்திரகுப்தன் பேரேடின் அளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். பின் அட்டையில் உள்ள இந்த வரிகள்தான் மொத்த சாரம்சம். சைக்கிள் கற்றுக் கொடுத்தால் எனக்கு முன்னாலேயே ஏறி ஓட்டிட்டுப் போவ – இப்படிப்பட்ட பங்காளி எனக்கு உண்டு. ஆனால் நீங்கள்...

மூத்த அகதி

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து நிறைய படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். சில பலருடன் பழகவும் செய்கிறோம். என்றாவது அந்த வாழ்க்கையை, அதன் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? குடியுரிமை பெற்று இன்னொரு தேசத்தில் வாழ்வது வேறு. அகதி வாழ்க்கை என்பது வேறு. அதிலும், நகரில் வாழும் அகதிகளின் வாழ்வும் முகாம்களில் வாழ்வோரின் வாழ்வும் வேறு. வாசு முருகவேலின் ‘மூத்த...

பாரா – ஒரு மதிப்புரை : ஆர். அபிலாஷ்

ஒரு படைப்பாளியாக பா. ராகவனைப் பற்றி சொல்ல சில நல்ல விசயங்கள் உள்ளன: 1) பா.ரா போனில் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். அழுத்தமான கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்வார். வயிற்றெரிச்சல், பொச்சரிப்பு போன்ற இலக்கிய அரசியல் ஆவலாதிகள் இல்லாதவர். 2) தன் இயலாமைகள் குறித்த புகார்களை பகிர மாட்டார். 3) நான் தான் தமிழ் எழுத்துலகின் ஒரே உலக நாயகன் என நிமிடத்துக்கு 60 தடவை சொல்ல மாட்டார். (இதையெல்லாம்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – ஒரு மதிப்புரை

பா ராகவன் எழுதிய இந்த சென்னை நினைவுக் குறிப்புகள் என்னும் கட்டுரைத் தொகுதியை நேற்றுதான் என் நண்பர் கிருஷ்ணகுமார் மூலமாக என் கையில் கிடைத்தது. எடுத்து படிக்கத் துவங்கி, கீழே வைக்க மனமில்லாமல் 160 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இதை கட்டுரை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. இது பா.ரா-வின் சுயசரிதம் (50%) என்று வைத்துக் கொள்ளலாம். அவருடைய பழைய நினைவுகளில்...

யதி – ஒரு மதிப்புரை (திவாகர். ஜெ)

“சாமியார்கள் பற்றிய நூல்கள் ஏதேனும் இதற்கு முன் வாசித்து இருக்கிறீர்களா? நான் ஒரே ஒரு நூல் தான் வாசித்து இருக்கிறேன். ”சாமியார்களின் திருவிளையாடல்கள்” என்ற நூல். அதில் போலிச் சாமியார்கள் குறித்தும், மண், பெண் என அத்தனையின் மீதும் அவர்கள் செய்த காவாலித்தனங்கள் குறித்தும் ஆதாரத்தோடு விளக்கப்பட்டிருக்கும். மற்றபடி, சாமியார்களுக்கும், நமக்கும் இப்போது உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமூக இடைவெளியை...

அபாயகரம் – ஒரு மதிப்புரை (விவேக் பாரதி)

‘அன்பின் பாராவுக்கு,’   நாடறிந்த (நாட்டை அறிந்த, நாடு அறிந்த) எழுத்தாளர் பாராவுக்கு அனேகமாக வரும் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். அதனால் நானும் அப்படியே தலைப்பிட்டேன். சற்று வித்தியாசமான இந்த நூல்நோக்கம் 2 நூல்களைப் படித்துக்கொண்டு வந்து முன்னால் போடுகிறது. இரண்டுக்குமான கைகள், பாராவுடையது. தீவிர இலக்கியவாதி, இலக்கியத் தீவிரவாதி, நாவல் உலகின் நாவல்பழம் உள்ளிட்ட பல அடைமொழிகளால்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி