Categoryகிண்டில்

என் அன்பே, இலவசமே.

பொதுவாக எனக்கு இலவசங்கள் பிடிக்காது. ஒவ்வோர் இலவசத்தின் பின்னாலும் ஒரு சூது உள்ளதாகத் தோன்றும். நான் இலவசமாக எதையும் பெறுவதில்லை. தருவதும் இல்லை. ஆனால் கிண்டில் இங்கே அறிமுகமான புதிதில் வாசகர்களை அந்தப் பக்கம் ஈர்ப்பதற்கு இலவசம் கணிசமாக உதவியதை மறுக்க முடியாது. அது ஒரு சந்தைப்படுத்தும் தந்திரம். எனக்குப் பிடிக்காத காரியம் என்ற போதிலும் முழு மனத்துடன் அதனைச் செய்தேன். ஏனெனில், எழுத்தாளனுக்கு இங்கே...

முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?

  ‘முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?’ கிண்டிலில் (மட்டும்) வெளியாகவிருக்கும் என்னுடைய அடுத்த கட்டுரை நூல். ஆகஸ்ட் 4ம் தேதி இந்தப் புத்தகம் வெளியாகிறது. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 125. ஆனால் இப்போது முதல் முன் பதிவு செய்தால் இதன் விலை ரூ. 60 மட்டுமே. முன்பதிவு வசதியின் மூலம் சரி பாதிக்கும் கீழே விலையில் தள்ளுபடி வழங்க முடிகிறது. நீங்கள் இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்தால்...

யதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N

அன்புள்ள ராகவன் சார், இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன். இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில்...

எழுத்துரு பிரச்னைகள்

இந்தக் குறிப்பு எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டுமானது. மற்றவர்கள் கடந்துவிடலாம். தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பகங்கள் உண்டோ, அத்தனை எழுத்துருக்களும் உண்டு. ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமான எழுத்துரு / என்கோடிங்கில் இவ்வளவு காலம் புத்தகங்களை அச்சிட்டு வந்திருக்கின்றன. இதில் மென்பொருள் என்றே சொல்ல முடியாத வன்னெழுத்துருக்களும் சேர்த்தி. (key உள்ள எழுத்துரு ஒன்றை நானே...

நிழலற்றவன் – முன்னுரை

இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன்...

ஊர்வன – புதிய புத்தகம்

ஊர்வன – கிண்டிலில் ஜூலை 3ம் தேதி வெளியாகவிருக்கும் என் புதிய புத்தகம். இது ஒரு குறுநாவல். 1998ம் ஆண்டு கல்கியில் இதனை எழுதினேன். அப்போது இக்கதைக்கு ‘ஒளிப்பாம்புகள்’ என்று தலைப்பிடப்பட்டது. மேலோட்டமான பார்வையில் இக்குறுநாவல் பேசுகிற விஷயம் பாலியல் சார்ந்ததாகத் தென்பட்டாலும் இதன் உள்ளடுக்குகள் தொடுகிற உயரங்கள் வேறு. ஒரு மலைக் கிராமத்தில் ஒரு சாமியார் நடத்தும் பள்ளிக்கூடத்துக்குத்...

அபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]

ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது. சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி