‘முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?’ கிண்டிலில் (மட்டும்) வெளியாகவிருக்கும் என்னுடைய அடுத்த கட்டுரை நூல். ஆகஸ்ட் 4ம் தேதி இந்தப் புத்தகம் வெளியாகிறது. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 125.
ஆனால் இப்போது முதல் முன் பதிவு செய்தால் இதன் விலை ரூ. 60 மட்டுமே. முன்பதிவு வசதியின் மூலம் சரி பாதிக்கும் கீழே விலையில் தள்ளுபடி வழங்க முடிகிறது. நீங்கள் இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்தால் ஆகஸ்ட் 4, புதன் கிழமை அன்று புத்தகம் வெளியானதும் தன்னால் வந்து உங்கள் கிண்டில் டிவைஸிலோ, தொலைபேசி கிண்டில் ஆப்பிலோ வந்து அமர்ந்துவிடும். அதற்கான தனி பிரயத்தனங்கள் ஏதும் தேவையில்லை. ஆகஸ்ட் 4க்குப் பிறகு புத்தகம் வாங்க விரும்பினால் ரூ. 125 விலைக்குத்தான் வாங்க வேண்டும்.
‘முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?’ புத்தகத்தை கிண்டிலில் முன்பதிவு செய்வதற்கான லிங்க், இங்கே உள்ளது. தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
பிகு: இன்று amazon prime day என்பதால் கிண்டில் புத்தகங்களுக்கு ஐம்பது சதத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த முன்பதிவுக்கும் அந்தச் சலுகை பொருந்தலாம். எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதாவது முன்பதிவு விலையான அறுபதிலும் 30 ரூபாய் உங்களுக்கு கேஷ் பேக்காகத் திரும்பி வரக்கூடும். முயற்சி செய்து பார்த்துவிட்டுத் தகவல் சொன்னீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
தள்ளுபடியிலோ, முழு விலையிலோ வாங்கி படிக்காமலே போய்விட்டால் …முழு தயிர்சாதம்தானே..