நேற்று முன் தினம் முதல் பேட்டையில் திடீர் திடீரென்று மின்சாரம் போய்விடுகிறது. எப்போது போகும், எப்போது திரும்பி வரும் என்றே தெரிவதில்லை. ஒரு மின்மிகை மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லையே; சென்னையை குஜராத்தோடு இணைத்துவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கேதான் காந்தி நகரை மட்டும் ஜொலிக்கச் செய்துவிட்டு எஞ்சிய பகுதிகளைப் பாகிஸ்தானோடு இணைத்துவிட்டார்கள் என்று கேள்வி.
அது எக்கேடோ கெடட்டும். என் பிரச்னை வேறு. மின்சாரம் போவதால் என் உலகம் இருண்டுபோவதில்லை என்பது உண்மையே. வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் காண்டாமிருக சைஸுக்கு ஜெனரேட்டர் இருக்கிறது. தடையின்றி மின்சாரம் கிட்டும்.
சிக்கல் எங்கே வருகிறதென்றால், இந்த மின்சார வாரியத்தை நம்பி எந்த ஆன்லைன் டிரான்சாக்ஷனும் செய்ய முடிவதில்லை. பணப்பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கும்போது பவர் பரிமாற்றச் சிக்கல் உண்டாகிவிடும். இணையம் தொங்கி, டிரான்சாக்ஷன் டிரங்க்கேடட் என்று செய்தி அலறும். சமயத்தில் பணம் போனதா, இல்லையா என்றே தெரியாது. அதுவும் எனது வங்கியான icici, கஸ்டமர் சர்வீஸில் முதுநிலை அயோக்கிய சிகாமணி. நடந்து முடிந்த பரிமாற்றங்களுக்கு ரசீது அனுப்பவே மாட்டான். அல்லது நாலு நாள் கழித்து மெதுவாக அனுப்புவான். இதுவே பாதியில் தொங்கிய பரிமாற்றம் என்றால் பாய்ந்து பாய்ந்து மெயில் வரும். மெசேஜ் வரும். Read More »சம்சாரம் போல் என்னைத் தாக்குகிறாய்!