இந்த மாதிரி பத்திக்குப் பத்தி சப் டைட்டில் போட்டு, பொருட்சுருக்கம் எல்லாம் சொல்லி, கடைசியில் உசாத்துணை கொடுத்து வாழ்நாளில் நான் எழுதியதே இல்லை. இது கவர்மெண்ட் சமாசாரம். வேறு வழியில்லாமல் போய்விட்டது.
பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024
பிப்ரவரி 8-9-10 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்கிறேன். டிஜிட்டல் வாசிப்பு: நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் பேசுகிறேன். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது முன்னின்று நடத்திய செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் அரசு விழா இதுதான். ஆய்வுக் கட்டுரைகள், குழு விவாதங்கள், வல்லுநர் உரைகள், நிரலாக்கப் போட்டிகள், கண்காட்சி என மூன்று...


