பிப்ரவரி 8-9-10 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்கிறேன். டிஜிட்டல் வாசிப்பு: நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் பேசுகிறேன். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது முன்னின்று நடத்திய செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் அரசு விழா இதுதான்.
ஆய்வுக் கட்டுரைகள், குழு விவாதங்கள், வல்லுநர் உரைகள், நிரலாக்கப் போட்டிகள், கண்காட்சி என மூன்று நாளும் கிட்டத்தட்ட திருவிழா போல நடக்கும் என்று தெரிகிறது. தமிழ்க் கணிமை முன்னோடிகள் பலர் பல நாடுகளிலிருந்து இதற்கெனச் சென்னைக்கு வருகிறார்கள்.
இம்மாநாடு குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் காணலாம்.
மாநாட்டில் பேசுவது தவிர, மலருக்கு ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன். மாநாடு முடிந்த பின்னர் அதனை இங்கே பிரசுரிக்கிறேன்.