செல்டெக்ஸ் உடனான எனது துவந்த யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது இப்போது. காசு கொடுத்துத் திரைக்கதை எழுதும் மென்பொருள் வாங்க வழியில்லாத / விரும்பாத எழுத்தாளர்கள் இனி சிக்கலேதுமின்றி செல்டெக்ஸைப் பயன்படுத்த இயலும்.
செல்டெக்ஸ் குறித்த என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு இதைப் படித்தால் புரிவதில் பிரச்னை இருக்காது என்று நினைக்கிறேன்.
திரையும் கதையும்
சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை. சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக...