எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
இக்கட்டுரைகள் பலவற்றில் பாடுபொருளாக நானே இருக்கிறேன். இது ஒரு சௌகரியம். என்னைவிட என்னை நன்கு அறிந்தவர்களோ, என்னைக் காட்டிலும் என்னை எள்ளி நகையாடக்கூடியவர்களோ யாரும் இருக்க முடியாது. உலகமானது ப்ரொக்ரஸிவ் லென்ஸ் அணிந்த எனது யானைக் கண்களின் வழியேதான் தெளிவாகத் தெரிகிறது.
இக்கட்டுரைகள் முன்னதாக அன்சைஸ் என்ற பெயரில் அச்சு நூலாக வெளியாகியிருக்கின்றன. அத்தொகுப்புக்கு முன்னுரை அளித்த என் பிரியத்துக்குரிய படைப்பாளுமை பேயோனுக்கு இந்த மின்னூல் வடிவை அன்புடன் சமர்ப்பிக்கிறேன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் உடனே திருப்பி அடித்துவிட வேண்டும் என்கிற நல்லெண்ணமே இதன் காரணம்.
217 பக்கங்கள். விலை 75 ரூபாய். அமேசான் இந்தியாவில் மட்டுமே இவ்விலை. அமேசானின் பிற தளங்களுக்குப் போய் வாங்கினால் சகட்டுமேனிக்கு விலை ஏற்றிவிடுகிறார்கள். எனவே amazon.inல் மட்டுமே வாங்கவும். (அச்சுப் பதிப்பாக இந்நூலின் விலை 110 ரூபாய்.)
அமேசானில் என் நூல்களுக்கான பக்கம் இது (இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை):
நகையலங்காரம் மின் நூலை வாங்க இங்கே செல்லவும்:
முந்தைய நூல்: 143 – குறுவரிக் களம் நூலை வாங்க இங்கே செல்லவும்.