குங்குமம் வார இதழில் தொடராக வெளி வந்த இக்கதையை இப்போது FreeTamileBooks.com மூலம் இலவச மின் நூலாக வெளியிடுகிறேன்.
கதை படிக்க நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த மின் நூலை நானே என் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கிறேன் என்பதுதான் இப்போதைக்கு என்னைக் கிறுகிறுக்க வைக்கும் சங்கதி.
ஐபுக் எடிட்டர், கேலிபர், ப்ரெஸ்புக் என்று தொடங்கி சமூகத்தில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான மின் நூல் தயாரிப்பு மென்பொருள்களையும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு இறுதியில் சிஜிலில் இக்கதைக்கு மோட்சம் அளித்தேன்.
சிஜில் பயன்படுத்தச் சொல்லி என்னைத் தூண்டிய நண்பர் பேயோனுக்கு நன்றி. அதில் டெவலப்மெண்ட்டே இல்லை; தொடாதே என்று அச்சுறுத்தி, இறுதியில் புத்தகம் நன்றாக வந்திருப்பதாகச் சொன்ன அப்புவுக்கு ஒரு குட்டு.
இந்நாவலை வாசித்து மகிழும் அல்லது இகழும் வேளையில் மின் நூல் தயாரிப்பினைக் குறித்தும் ஓரிரு வரிகள் எனக்கு எழுதுவீர்களானால் சந்தோஷம். மேம்பாட்டு ஆலோசனைகள் தருவீர்களானால் மானசீகமாக சேவிப்பேன்.
இனி இது உங்களுக்கு.
நாவலை டவுன்லோட் செய்ய FreeTamileBooks
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
2006 நவம்பர் 24 . அனுஷ்கா நடித்த “ரெண்டு” ரிலீஸ் ஆச்சு; அப்போ தலைப்புக்கு [படத்துக்கு] தடை கேட்டு பிரச்சனை பண்ணியிருந்தால். தமிழ்கூறும் நல்லுலகுக்கு அனுஷ்கா கிடைத்திருக்க மாட்டார். வாழ்க நிம் தொண்டு. 🙂
மின்னூல் ஆக்கம் நன்றாக இருந்தது. நாவல் நன்றாக இருந்தது. அறிவுஜீவித்தனம் தோல்வியுறும் நேரம் இயல்பாய் பாசாங்கில்லாமல் வடிக்கப்பட்டிருந்தது.
நன்றி.
கதை நன்றாக இருந்தது பா.ரா.சார். ஃபேஸ்புக்கில் இந்த ”ரெண்டை”ப் பற்றி நாலுவரி எழுதி இருக்கிறேன்.