அவன் தப்பிக்கவேண்டும் என முடிவெடுத்து விட்டான். அதைச் செயல்படுத்தியே தீருவது என்னும் தீவிரம் அவனை அங்கு நடக்கும் சூழல்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தூண்டுகிறது. அவன் காய்களை நகர்த்துகிறான்.
தன்னம்பிக்கை மிகுந்தவன் அவன். அவன் நல்லவனா கெட்டவனா என்பது இரண்டாம் பட்சம். அந்த அபார தன்னம்பிக்கைதான் அவனை அந்த ஆபத்திலிருந்து காக்கப் போகிறது.
அவன் என்ன அவ்வளவு நல்லவனா என்னும் கேள்விக்கும் அவன் என்ன குற்றம் செய்தான் என்ற கேள்விக்கும் அவனது பதில் சுவாரஸ்யம்.
கொஞ்சம் கொஞ்சமாக கதை மிகுபுனைவில் இருந்து நிஜக்களத்தில் நுழைய முற்படுகிறது. அந்த நீலநகரம் தான் கதைக்களமாக இருக்கப் போகிறதா? அந்த நீலநகரத்து மனிதன் தான் இந்தக் கதையின் நாயகனா? என்ற கேள்விகளை நம்மிடம் எழுப்பி விட்டு அந்த நகரத்தோடும் அந்த நகரத்தில் பரிதாபமாய் நமக்கு தோற்றமளிக்கும் அந்த நபருடனும் ஐக்கியமாகிறது கதை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.