அனுபவம்

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 5)

சூனியக்காரனுக்கு கோவிந்தசாமியை மிகவும் பிடித்துப்போனது அதற்குக் கரணம் எல்லாம் இல்லை முதலில் சந்தித்த ஒரு ஆள் என்பதாலேயே அவனுக்கு இவனைப் பிடித்துவிட்டது.

கோவிந்தசாமியைப் பற்றிக் கவலைப்பட ஒரு ஆள் அதுவும் சூனியக்காரன் இருக்கிறான் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. ஆனால் இந்த சூனியக்காரன் நாம எதுவும் சொல்லவேயில்லை இருந்தாலும் நம்மைப் பற்றிய முழுவிவரமும் தெரிந்து வைத்திருக்கிறான் அதுதான் எப்படியென்று தெரியவில்லை என்ற யோசனையுடன் கோவிந்தசாமி ஒருபக்கம் இருந்தாலும் அவன் மனதில் அவனை சாகரிகா “போடா சங்கி” என்று சொன்னதை மறக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

கோவிந்தசாமிக்கு, சாகரிகாவால் எத்தனையோ அவமானங்கள் இருந்தாலும் அவள் அவனைப் போடா சங்கி என்ற அந்த ஒரு வார்மட்டும் அவன் மனதில் ஈட்டியால் குத்திக்கொண்டே இருக்கிறது. இந்த குழப்பமும் வெறுப்பும் கொண்ட மனநிலையில் எப்படியாவது இந்த நகரத்துக்குள் சென்று சாகரிகாவை சந்தித்து விட வேண்டும் என்று அந்த நகரின் வாசலில் பாவமாய் நின்று கொண்டிருக்கிறான்.

காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலேதும் இல்லாமல் நிர்கதியாய் நிற்கும் கோவிந்தசாமி, உண்மையில் அவன் மனதில் அவனின் ஆசை மனைவி சாகரிகா இவனோடு வாழ்ந்த அந்த நாட்களை நினைத்துக்கொண்டு ஒரு உற்சாகத்துடன் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி எப்படியோ நீல் நகருக்குள் வந்துசேர்ந்த விடுகிறான்.

பாண்டிச்சேரியிலிருந்து ஆரம்பிக்கும் இவனின் வாழ்க்கை சரித்திரம் கொஞ்சம் கொடுமையானதுதான் . பாவம் ஒரு சாமியின் வாழ்க்கைக்குள் எத்தனை சாமிகளின் வரலாறு. வரலாறு நீண்டுகொண்டே செல்கிறது. அது போகட்டும் பலதலைமுறை எனப்போனாலும் இவர்களின் குடும்பத்தில் சாமி என்ற பெயர் பிரிக்கமுடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது. ஏன் நம்ம கோவிந்தசாமி கூட தன் மனைவி சாகரிகாவிடம் சொல்லி வித்திருந்தான் குழந்தை பிறந்தால் சாமி என்று பெயர் வைக்க வேண்டும் என்று.

வாழ்க்கையில் வெறுமையில் வாழ்ந்த நம்ம சாமிக்கு ஒரு தேவதையாய் தோன்றினால் சாகரிகா, நப்பு காதலாக மாறி கல்யாணம் வரை வளர்ந்து அதே வேகத்தில் பிரிவும் வளர்ந்துவிட்டது. இப்போது அவள் இந்த நீல நகரத்தில் இருக்கும் தகவலறிந்து அவளை அழைத்துச் செல்லவே இந்த நகரின் நுழைவுவாயிலில் காத்திருக்கிறான்.

பாவமாக இருக்கும் இவனின் மீது தான் நம்ம கத்தியின் நாயகன் சூநியான் வந்து அமருகிறான். இவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒருகட்டத்தில் கந்தசாமி சூரியனை நம்ப ஆரம்பிக்கிறான் அதன் விளைவாகத் தான் தேடிவந்த தகவல் தெரிந்து அவன் இவனை அந்த வீதியில் நிறுத்திவைத்துவிட்டு சாமியின் நிழலை அழைத்துச் செல்கிறான் சாகரிகாவை தேடுவதற்கு..

காத்திருப்போம் அவள் என்னவனாக இருக்கிறாள் என்று பார்ப்பதற்கு.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி