இந்த அத்தியாத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் மக்கள் இந்த நீல நகருக்குள் இடம் பெயர்ந்து வந்ததை தான் சொல்கிறாரோ என்று வாசிக்க ஆரம்பித்தேன் பிறகு தான் தெரிந்தது இது மக்கள் இடம்பெயர்ந்தது அல்ல மக்களின் உறுப்புகள் இடம் பெயர்ந்து இருக்கிறது என்று. இது சற்றே வித்தியாசமான சிந்தனைதான்.
கற்பனைக்கு எல்லையில்லை என்பதால் நாமும் அதே சிந்தனையுடன் பயணிப்போம்….
இந்த நீல் நகரம் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து தெரிகிறது இது தானாகத் தோன்றிய நகரம் அல்ல மாறாக நவீனமாக உருவாக்கிய நகரம் அதனால் தான் சீரான கட்டமைப்புகளும், காலனிய குடில்களும் என நாம் காணும் தற்காலத்தில் காணுகின்ற நகரைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிந்தசாமியின் நிழலுடன் சென்று கொண்டிருக்கும், சூனியன் உடன்வரும் கோவிந்தசாமியின் நிழலிடம் நடத்தும் உரையாடல்கள் அருமையாக இருக்கிறது.
நீல நரகத்தின் இரவு முழுவதும் மழை பெய்துகொண்டிருக்கிறது, ஒரு வழியாக மழை முடிந்ததும் நடக்கத் தொடங்கிய இவர்கள் நகர் முழுதும் நடந்து நடந்து சாகரிகாவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நடக்கும் வழியில் சந்திக்கும் நீல நாகர வாசியிடம் சாகரிகாவின் விலாசத்தைக் கேட்கிறார்கள் ஆனால் அவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் சொல்லாத கோவிந்தசாமியினை கோபித்துக் கொள்ளும் சூனியன் இறுதியாகச் சூரியன் சொல்கிறான் அவள் பத்திரிக்கையாளர் என்று. உடனே அந்த நகர வாசியும் உடனே பெயர் சொல்கிறான்.
இவர்களிடம் உரையாடு நீல நகர வாசி தன் பதில்களைத் தன் நெற்றியில் எழுதிக் காட்டுவதும் அது புரியாமல் இவர்கள் கேட்கும் பொழுது அவன் இவர்களுக்குப் புரியும் மொழியில் அதாவது சூனியனின் மொழியிலும், தமிழிலும் மொழிபெயர்த்துக் காட்டுவது கூகுள் ட்ரான்ஸ்லேற்றையே மிஞ்சிவிடுகிறது.
இந்த நீல நகரத்தின் பெண்கள் சிகையினை ஒரே சீராக வெட்டியிருப்பதும் மாறாக ஆண்கள் நீண்ட கூந்தல் வைத்திருப்பதும், மேலும் இவர்களை அடையாள உறுப்பு இடம் மாறி இருப்பது கொஞ்சம் வியப்பாகவே இருக்கிறது இவர்களுக்கு.நமக்கு இல்லை ஏனெனில் நமக்குக் கதை தான் முக்கியம் அதனால் ஆசிரியர் அழைத்துப் போகும் வழியில் நாம் பயணிக்கும் மனநிலையில் தான் இப்போது இருக்கின்றோம்.
இதில், மிகவும் வியப்பானது நீல நகர வாசிகள் தங்களது பின் தலையில் இருக்கும் கண்ணுக்குக் கண்ணாடி அணிவித்திருப்பதும், நெற்றியில் இருக்கும் குறிக்கு டாட்டூ போட்டிருப்பதும் வியப்பிலும் வியப்பானது தான்.
இது சிறிய நகரம் தான் என்று எண்ணி இருந்த இவர்களுக்கு இனிமேல் தான் தெரியும் எப்படி கண்டுபிடிப்பது என்று ஏனென்றால் அதிக மக்களைக் கொண்டிருக்கிறது இந்த நீல் நகரம். சாகரிகா என்ற பெயரில் அதிகம் பெயர்கள் வசிக்கிறார்கள் இந்த நகரின் எல்லா பகுதியிலும் இருந்தாலும் மனம் தளராமல் சூனியன் உதவி செய்கிறான் . அலைந்து திரிந்து கொண்டிருக்கும் இவர்கள் இறுதியில் ஒரு வழியாக இருவரும் சாகரிகாவின் வீட்டினை கண்டுபிடித்து விடுகிறார்கள்.
இனி தான் தெரியும் சங்கி என்று சொல்லிவிட்டுப் பிரிந்து வந்த சாகரிகா எப்படி கோவிந்தசாமியை எதிர்கொள்வாள் அல்லது இவன் எப்படி அவளைச் சமாளிப்பான் என்பது.
அடுத்த பகுதியில் பார்ப்போம்.