பாராவின் பங்கெடுத்து வை

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு இன்று திருநீர்மலைக்குக் குடும்பத்துடன் சென்று வந்தேன். குரோம்பேட்டையில் இருந்த காலத்தில் அது பக்கத்து க்ஷேத்திரம். எனக்கு முன்னால் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வார் திருநீர்மலைக்குப் போனபோது ரங்கநாதப் பெருமாளை ஏறிச் சென்று சேவிக்கக்கூட அவரால் முடியவில்லை. பெரிய மழைக்காலம் போலிருக்கிறது. ஊர் முழுக்க தண்ணீர் நிறைந்து கிடக்க, எதிர்ப்பக்கத்து மலை ஏதோ ஒன்றின்மீது ஏறி நின்று பாடிவிட்டுப் போய்விட்டார். [tabs slidertype=”images”] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111911.jpg[/imagetab] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111918.jpg[/imagetab] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111913.jpg[/imagetab] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111914.jpg[/imagetab] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111917.jpg[/imagetab] [imagetab width=”550″ height=”325″]https://writerpara.com/paper/wp-content/uploads/2011/07/300720111912.jpg[/imagetab] [/tabs]

திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை எனக்கு அறிமுகமானபோது அந்த ஊரின் சிறப்பாகச் சொல்லப்பட்டது, நல்ல நாட்டு சாராயம். ஊரின் பெயருக்கு ஏற்ற தொழில் என்று தோன்றுவது இயல்பு. சாயங்காலம் ஆனால் போதும். பாண்ட்ஸ் கம்பெனிக்கு எதிர்ச் சாலையிலிருந்து திருநீர்மலை போகிற சாலையில் சைக்கிளிலும் ட்ரை சைக்கிளிலும் கருப்பு கேன்களில் சாராயம் போய் வந்தபடி இருக்கும். சுத்துப்பட்டு கிராமாந்திரங்கள் அனைத்துக்கும் திருநீர்மலைதான் தாகசாந்திக் கேந்திரம்.

முன்பு பலமுறை போயிருக்கிறேன். திருமணமான புதிதில் என் மனைவியுடன் அடிக்கடி நான் வெளியே போகிற இடம் திருநீர்மலைதான் என்பதை இன்று நினைவுகூர்ந்தார். செலவில்லாத இன்பச் சுற்றுலா. தவிரவும் திரும்பி வரும்போது புளியோதரையுடன் ஓரிரு கிலோ புண்ணியம் கட்டிக்கொண்டு வந்துவிட முடியும்.

எப்படியும் பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இன்று திடீரென்று திருநீர்மலைக்குப் புறப்பட்டபோது ஏனோ முதலில் அந்த சாராய வண்டிகள்தான் நினைவுக்கு வந்தன. ஆனால் வழியில் அப்படி எந்த வண்டியையும் பார்க்க முடியவில்லை. ஊர் நன்றாக வளர்ந்துவிட்டிருக்கிறது. ரிங் ரோடு புண்ணியத்தில் ஏகப்பட்ட புதிய குடியிருப்புகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், நல்ல சாலைகள், குரோம்பேட்டைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் சதுர அடி மதிப்பு.

மலையின் அடிவாரத்தில் உள்ள நீர்வண்ணப் பெருமாள் கோயில்தான் எனக்கு ரொம்ப இஷ்டம். பிரம்மாண்டமான ஆலயமும் அதைவிடப் பிரம்மாண்டமான அமைதியும். பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் நிற்க இடமிருக்காது. மலை, ஏரி, வயல் வெளி, அமைதி என்று சென்னைக்கு வெகு அருகே இப்படியொரு இடம் இருப்பது பெரிய விஷயம் என்பதால் தமிழ்த் திரையுலகுக்குத் திருநீர்மலை ஒரு அவுட் டோர் ஏவி எம். ஆன்னா ஊன்னா கேமராவைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஜத்திலும் திரையிலுமாக ஆயிரக்கணக்கான காதல் திருமணங்களை நடத்தி வைத்த பெருமாள் அவர். கோயில் பட்டாச்சாரியார்களுக்கு சீன் சொல்லிவிட்டால் போதும். எண்ட்ரி எந்தப் பக்கம் என்பதை அவர்களே தீர்மானித்து வந்து உட்கார்ந்து மாங்கல்யம் தந்துனானேனா என்று ஆரம்பித்துவிடுவார்கள். மானிட்டர் பார்க்காமலேயே ஷாட் ஓகே பண்ணிவிடலாம். அந்தளவுக்கு சினிமா, சீரியல்கள் பழகிய ஊர்.

நின்ற கோல நீர்வண்ணனை சேவித்துவிட்டு, மலை ஏறித்தான் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். என் தூல சரீரம் மலையேறி வெகுகாலம் ஆகிவிட்டபடியால் உள்ளுக்குள் ஓர் உதைப்பு இருந்தது. ஆனால் பரவாயில்லை. இரண்டொரு இடங்களில் நின்று மூச்சு வாங்க நேர்ந்தாலும், ஏறிவிட்டேன். அன்று பார்த்த மேனிக்கு அப்படியே இருக்கிறது கோயில். எல்லா வைணவ திவ்யதேசங்களைப் போலவும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் என்றாலும் திருநீர்மலைக் கோயில் சுத்தத்துக்குப் பெயர் போனது. தூணில் துடைப்போர் இல்லாத கோயில். சுயம்புவான ரங்கநாதப் பெருமாள் சன்னிதியில் இப்போது ஃபேன் போட்டிருக்கிறார்கள். சற்றுப் புருவம் நெளித்து யோசித்தாலும் சட்டென்று அடையாளம் தெரிந்துகொண்டு ‘சௌக்கியமா?’ என்று கஸ்தூரி பட்டாச்சாரியார் கேட்டது சந்தோஷமாக இருந்தது. எனவே ரங்கநாதருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

சில காலம் முன்னால் கோயில் சம்ப்ரோக்‌ஷணம் ஆனது. அப்போதே போயிருக்க வேண்டும். நீர்வண்ணப் பெருமாளுக்கும் எனக்கும் ஒரு நீண்ட நெடுங்காலத் தொடர்புண்டு. என் முதல் வெண்பாமின் கதாநாயகன் அவர்தான். எழுதி எப்படியும் பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். இன்னும் மறக்கவில்லை:

தேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்
ஊரில் நீபெரிய ஆளாமே – யார்யாரோ
காரில் போக வழிசெய்த கருணையினில்
பாராவின் பங்கெடுத்து வை.

Share

21 comments

 • ”என்னங்கடா தலைப்பு இது?” என்று படிக்க ஆரம்பித்தவன், கடைசி வரியைப் படித்து அசந்துவிட்டேன்.

  அடுத்த சென்னை விஜயத்தின்பொது சேர்ந்தே செல்வோம்.

  ப்ரில்லியண்ட்!

  • சொல்லாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் நீங்கள் உள்ளிட்ட ஒரு மாபெரும் கோஷ்டியைக் கதறவைக்குமளவுக்குத் தளை தட்டாத வெண்பாக்கள் 108 எழுதிப் பிரசுரிக்காவிட்டால் நான் பாரா இல்லை.

 • jQuery(‘#et-image-slider822 .et-image-slides’).et_shortcodes_switcher({sliderType: ‘images’, auto: false, autoSpeed: ‘5000’,useArrows: true, fx: ‘fade’, arrowLeft: ‘#et-image-slider822 a.left-arrow’, arrowRight: ‘#et-image-slider822 a.right-arrow’, linksNav: ‘#et-image-slider822 .controllers a.switch’,findParent: false, lengthElement: ‘a.switch’});

  எழுதியவர் எவரோ?? பைதபை சுட்டுக்கிறேன்

 • தேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்
  ஊரில் நீபெரிய ஆளாமே – யார்யாரோ
  காரில் போக வழிசெய்த கருணையினில்
  பாராவின் பங்கெடுத்து வை.

  தே / ரில் போ / கின்/ ற- தளை தட்டுதே

  பெரு / மா/ ளே திரும்/பிப் / பார்- தளை தட்டுதே

  ஆரம்பமே தட்டுதே பெருமாள் எப்படி பங்கு தருவார்

 • சென்னையிலேயே பல வருடங்களாக இருந்தாலும் இன்னும் திருநீர்மலைக்கு செல்லாமல் ‘பாரா’முகமாகவே இருந்துவிட்டேன். ஆகஸ்டில் நிச்சயம் பார்த்துவிடுவேன். பகிர்வுக்கு நன்றி.

 • சரி.. சரி.. பெருமாள் பங்கு கொடுத்து விட்டார். அவருக்குரிய பங்கை நீங்கள் கொடுத்து விட்டீர்களா? (ஐ மீன் ஏதாவது பக்தி பரவசமூட்டும் கதைகளை எழுதி அவர் புகழ் பாடுவதைச் சொல்கிறேன்.ஏனென்றால்… – திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள்… – அந்த வகையில் நீங்களும் பாடியிருப்பதால் 😉

 • பின்னாளில் எங்கள் குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள்ன்னு ஆழ்வார்கள் உங்களையும் சேத்துகிட்டா,முதல் வெண்பாமில் பாரா பாடல் பெற்ற திருத்தலம்ன்னு நீர்வண்ணாப்பெருமான் புகழடைவாராக. வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் போல பாட்டில் பாராவின் பங்கெடுப்பு முக்கியமானது.

  வரலாறு முக்கியம் அமைச்சரே

 • இலக்கணம் சரியாய் இருக்கிறதாவெனப் பார்ப்பவன் அல்ல
  தலைக்கணம் இல்லாமல் இருக்கிறானா எனப் பார்ப்பவனே பெருமாள்!..எனவே உங்களுக்குப் பங்கு கிடைக்கும்…..

 • காரில் போகாதே கண்ணும் படும்பாரு
  மோரும் குடிக்காதே மார்பில் கபம்சேரும்
  பாராவே நான்சொல்வேன் பார்த்து நடந்துக்கோ
  மாவாவைப் போட்டே மகிழ்

 • >>ஐ மீன் ஏதாவது பக்தி பரவசமூட்டும் கதைகளை எழுதி அவர் புகழ் பாடுவதை

  – ரமணன், ஏன் இந்தக் கொலை வெறி?!. பாரா ஏற்கெனவே 108 வெண்பாம் எழுதுவதாக (பயங்கரப்) பிரமாணம் எடுத்து எங்கள் வயிற்றில் திருநீர்மலை சாராயத்தைக் கலக்கியிருக்கிறார் :).

 • அடாது பெய்யும் மழையிலும் -விடாது
  பள்ளிக்கு சடார் சடாரென்று
  உருண்டு வர கடா மாடுகளா நாங்களென்று
  கேட்டால் இல்லை பதில்

  இது நான் முதலில் எங்கள் பள்ளிக்கு அருகில்
  எழுந்தருளியிருக்கும் பண்ணாரி அம்மன் மேல்
  பாடிய வெண்பா..

  அடை மழை நாளில் எங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ்
  வைத்த கோபத்தில் கொப்பளித்தது…

 • அதான் கிழக்கு பக்கமா நின்னு கிளீனா கொடுத்துட்டானே! ஆனால் சும்மா ஒன்னும் குடுக்கல. உங்களுக்கு வாங்கும் தகுதியும் இருந்தது.

 • Dear Para,

  Thanks for the pictures of the temple. My paternal grandmother was born and brought up here. Must have been at least 25 years since i have been to this place.

  With Regards
  Narasimhan

 • இத்தால் ஸம்ஸாரத்தின்னுடைய தோஷங்களை உபபாதித்து காட்டுகிறார். பழகிப்போகிற சம்ஸார யாத்திரரையிலும் ஜீகுப்ஸைப் பிறக்கும்படி இனிதென்று அம்முகத்தாலே போக்யதா பிரகர்ஷத்தை சொல்கிறது.

 • பாரா சார்,

  இலக்கணப் படி இப்படி இருக்க வேண்டாமோ?

  “தேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்
  ஊரில் நீபெரிய ஆளாமே – காரில்
  ஆராரோ போக வழிசெய்த கருணையினில்
  பாராவின் பங்கெடுத்து வை.”

  நன்றி!

  சினிமா விரும்பி

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter