அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 31)

சில அத்தியாயங்களாக காணாமல் போயிருந்த கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் வந்துவிட்டான். அவன் மருத்துவமனையில் இருந்துகொண்டு தன்னுடைய மனைவியை பற்றிய கடந்த கால நினைவுகளை எண்ணிப் பார்த்து ஏக்கமுடன் இருக்கிறான்.
அந்த இடத்திலும் அவனுக்கு தேசியத்தின் மீதும் தாமரையின் மீதும் இருக்கும் பற்று சிறிதும் குறையவில்லை.
தலைகீழாக நின்றாலும் நீலநகரத்தில் தாமரை மலராது என்று ஒரு சாதாரண நர்ஸுக்கு கூட தெரிந்திருக்கிறது. கோவிந்தசாமி அதைக்கூட தெரிந்து கொள்ளவில்லை. நல்லவேளை, அவள் தமிழ்நாட்டில் சொல்வதுபோல சொல்லவில்லை. சொல்லியிருந்தால் கொஞ்சம் அநாகரிகமாக இருந்திருக்கும்.
அவளின் ஆலோசனைப்படி நீலவனத்திலிருந்து ஒரு மந்திர மலரைப் பறித்து வந்து சாகரிகாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக கோவிந்தசாமி நீலவனத்திற்கு கிளம்பிச் செல்கிறான்.
அங்கே நடக்கும் கூத்துக்கள் நாம் அறிந்ததுதானே. இவன் போய் அங்கே என்ன பாடு படப்போகிறானோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி