நீலநகர வடிவமைப்பில் காட்டிய வசீகரத்தை நீலநகர வனத்திலும் பா.ரா. விட்டு வைக்கவில்லை. தனித்தனி பிரிவாக இயங்கும் அலுவலகம் போல சமஸ்தானங்களை அமைத்து. அதில் பேய், பிசாசுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்!
சூனியன் கொடுத்த அசைன்மெண்டை கையில் வைத்துக் கொண்டு கோவிந்தசாமியின் நிழலைத் தேடி வரும் செம்மொழிப்ரியா தடாகக் கரையோரத்தில் கண்டு பிடிக்கிறாள். மயக்கும் வார்த்தைகளில் நிழலைத் தன் வசப்படுத்த முனைகிறாள்.
அவனையே அவனுக்குக் காட்ட – நிழலுக்கே நிழலைக் காட்ட தன் தேக வெளிச்சத்தால் வெளியை நிறைக்கிறாள். அந்த நிறைத்தலில் கோவிந்தசாமியின் நிழல் ”கண்டேன், கண்டேன்” என கூத்தாடுகிறது. தன்னைக் கண்டு கொண்டவன் தடம் மாறிப் பயணிப்பானா? பார்ப்போம்.