செம்மொழிப்ரியாவின் வார்த்தை வசியத்தில் கோவிந்தசாமியின் நிழல் கரைய ஆரம்பிக்கிறது. சத்தியம் செய்யக் கூட சப்த நாடியும் ஒடுங்கும் இடத்தை சுட்டியிருப்பது உச்சம்!
நிழல் செம்மொழிப்ரியாவிடம் சாகரிகாவை விரும்பியது உள்பட தன் கதையை விவரிக்கிறது. சாகரிகாவுக்காக உதவுவதற்கான திட்டம் குறித்தும் சொல்ல அந்த முனையில் நிழலின் மனதில் சந்தேக சலசலப்பை உருவாக்கி அதன் நோக்கத்தை திசை திருப்பி விடுகிறாள். கூடவே, மந்திர மலரை நிழலின் மீது வீசி போகிறாள். மந்திரமலர் தன் இயல்பை நிகழ்த்தத் தொடங்குகிறது.
கோவிந்தசாமியை விட அவன் நிழல் அடிக்கடி சொல்லிக் கொள்வதைப் போல புத்திசாலித்தனமாகவே இருப்பது தெரிகிறது. கோவிந்தச்சாமி போல் புலம்பித் திரியாமல்சுயமாக முடிவொன்றை எடுக்கிறது. சாகரிகாவின் துணையின்றி தனக்கான சமஸ்தானத்தை உருவாக்க முடிவு செய்கிறது. “காதல் பேட்டை” என்று தன் சமஸ்தானத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்யும் நிழல் அதன் நிர்வாக அலுவலராக நிழலிடம் ’காதலி” என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் செம்மொழிப்ரியாவை நியமிக்கிறது.
எதிராளிகளின் கோட்டைகளுக்குள் – எண்ணங்களுக்குள் பகையாளிகள் ஊடுருவ ஆரம்பித்திருக்கிறார்கள்? என்ன நிகழப்போகிறது? என் அறிய காத்திருப்போம்.