அனுபவம்

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 6)

மீண்டும் மாய உலகினை நோக்கி பயணிக்கிறது கபடவேடதாரி. வித்தியாசமாக சித்தரிக்கபட்டிருக்கும் நீலநிறவாசிகளின் தோற்றங்கள் மேலும் ஆர்வமாக கதையை வாசிக்க வைக்கிறது. அந்த தோற்ற சித்தரிப்பு கொடுரமாக இருப்பினும், வேறு மாதிரியான ஓர் உலகினில் பயணிப்பது அருமையாக இருக்கிறது.

சூனியனை போலவே கோவிந்தசாமியை போலவே நானும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை. ஒருவேளை கோவிந்தசாமியின் தோற்றமும் நீலநிறவாசிகளை போல் மாறக்கூடுமோ. சூனியனுக்கு பொறுமை நீடிக்குமா. கடைசிவரை கோவிந்தசாமியுடன் பயணிப்பானா‌. சூனியன் சாகரிகாவை எதிர்கொள்ளும் சமயம் அவள் எப்பிடி நடந்துக்கொள்வாள்.

இன்னும் நிறைய நிறைய கேள்விகள் என்னைப் போட்டு படுத்துகிறது. அடுத்தடுத்து படிக்க மெய்யாலுமே ஆர்வம் கூடுகிறது!

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி