ரகோத்தமனைச் சந்தியுங்கள்!

கிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு நேர்மையான புலன் விசாரணை என்பது எவ்வாறு இருக்கும் என்பதை முதல் முறையாக இந்நூல் மிகையின்றி விவரித்திருப்பதும் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்.             [ நூலைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள மதிப்புரை இங்கே. ]

நூலாசிரியரும் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியுமான கே. ரகோத்தமன், பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் கடந்த சில வாரங்களாக மிகவும் பிசி;-) ஒருவாறு மீடியா பேட்டிகளை முடித்துக்கொண்டு நாளைக்குப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்குக்கு வருகை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே. ரகோத்தமனை நேரில் சந்திக்க, என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க, உரையாட, புத்தகத்தில் அவரது கையெழுத்துப் பெற விரும்பும் வாசகர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணி அளவில் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு அரங்குக்கு [P1] வரலாம்!

கிழக்கு அரங்கில் ரகோத்தமன் குறைந்தது ஒரு மணிநேரம் இருப்பார்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

1 comment

  • para sir ,
                       i miss the opportunity ,because i now only bought that book (RAJIV ASSACINATION )and your s 'MAYAVALAI' cost is good worth, i think this is not too much.., but i can t buy today
    regards
    Puthaga pithan    

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading