கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியை ஏன் தனக்கு பிடித்திருந்தது என்பதற்கு சூனியன் சொன்ன காரணம் எனக்கு பிடித்திருந்தது. அவன் ஒரு மூடன் என்றாலும் அதை அறியாதவன் இல்லை. அவன் அதை அறிந்திருக்கிறான். ஆனால் அதை அவனால் விடமுடியவில்லை.
வேறு ஏதாவது சொல்லி அவனைத் திட்டியருந்தால் கூட அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். அவனை சங்கி என்று அவள் திட்டியதை அவனால் ஏற்க முடியவில்லை.
ஏனென்றால் அவனுக்கு அதில் பெருமையில்லை. இதை வைத்து பார்க்கும் போது அவன் அந்தப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு நிறைய அவமானப்படுத்தப்பட்டு இருப்பதுபோல தெரிகிறது.
அவன் சொன்ன அவனது வம்ச சரித்திரமும் அவளைக் கடுப்படித்திருக்கலாம். அதனால்தான் அவனை விட்டு நீங்க அவள் முடிவெடுத்திருப்பாள்.
அந்த வம்ச சரித்திரத்தை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மேலும் கதையில் இந்த சரித்திரத்திற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்குமோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
‘அவள் ஏன் அந்த நீல நகரத்துக்கு போனாள்?
அவன் அதை எப்படி கண்டுபிடித்தான்?
அவன் எப்படி அவளை கண்டுபிடிக்கப் போகிறான்?
அடிப்படையில் மிகவும் நல்வனாக இருக்கும் அவனை சூனியன் என்ன செய்வான்?
இருவரில் யார் அந்த இணைப்பினால் பலனடையப் போகிநார்கள்? சூனியனின் நோக்கம் என்ன?’
என்பது போன்ற பலப்பல கேள்விகளுடன் முடிகிறது இந்த அத்தியாயம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி