கடந்த அத்தியாயத்தின் இறுதியில் அந்த நீலநகரத்தின் உள்ளே நுழைவதற்கான அனுமதி பெற்று உள்ளே வரும் கோவிந்தசாமியுடன் சூனியன் உரையாடுகிறான்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் கோ.சாமி எவ்வளவு முட்டாள் என்பதை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நிறுவுகிறார். இந்தச் சூனியனோ லேசுபட்டவன் அல்ல. என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை.
சூன்யன் உதவியுடன் தன் நிழலாக அந்த நகரத்தை சுற்றி வரும் கோ.சாமி அங்கு ஒரு மாய எதார்த்த உலகை காண்கிறான். நாமும் தான்.
அந்த நீலநகரமே ஒரு மாய யதார்த்த உலகம். அங்கே இருக்கும் கட்டிடங்கள் வித்தியாசமானவை. அங்கிருக்கும் ஆண்கள் வித்தியாசமானவர்கள். பெண்களும் அப்படித்தான்.
வழிகேட்க அவர்கள் சந்தித்த அந்த மனிதனுடன் உரையாடுவதைப் படிக்கும்போது இதுபோன்ற இன்னும் நிறைய சங்கதிகள் நிறைந்த உலகாக அது இருக்கப் போவதை நம்மால் உணர முடிகிறது.
அப்படிப்பட்ட அந்த உலகத்தில் அவளைத் தேடி அலையும் அவர்கள் அவளைக் காண்கிறார்கள். கோ.சாமி பதறி அலறுகிறான்.
காரணம் என்ன?
அடுத்தது என்ன?
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.