சூனியர்களுக்கு பெயர் இல்லை என் கையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கதையில் வந்தால் எப்படி நினைவில் வைத்திருப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை ‘வாசகர்களை குழப்புவதற்காக பாரா செய்த சதி’ அது என்பதை சூனியன் வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.
உடலும் மனமும் உணர்வும் இல்லாத சூனியனைக் கூட இந்த நீல நகரம் உணர்ச்ச மயமாக்கி விடுகின்றது என்றால் பூமியில் இருந்து வந்த மனிதர்கள் எம்மாத்திரம்? அவர்களின் நிழல்கள் கூட தடுமாறித்தான் போய்விடுகின்றன.
மீண்டும் கதை அந்த மாய எதார்த்த களத்துக்கு சென்றுவிட்டது. நீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பது நிழலில் இருந்து கதைகள் தயாரிப்பது என்று சுவாரசியமாக நகர்கின்றது.
கடைசி பத்தியில் ஒரு பஞ்ச் வைத்தார் பாருங்கள் அங்கே நிற்கிறார் பாரா. சிரித்து மாளவில்லை.