கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 12)

ஒரு பக்கம் கோவிந்தசாமியின் நிழல் அந்த நகரத்தின் குடியுரிமையை சூனியனின் மூலமாக பெற்று சாகரிகாவின் பொய்களுக்கு பதிலளிக்க தயாராகிறது.
இன்னொரு பக்கம் கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி மூலமாக நகரத்தின் குடியுரிமையை பெற்று அவன் பக்கத்து நியாயங்களைச் சொல்ல விழைகிறான்.
சாகரிகாவின் பக்கத்தில் அவளது பதிவுகள் மூலமாக ஒரு ஃப்ளாஷ்பேக்கை நமக்கு சொல்லிக் கொண்டிருந்த சூனியன் அதைத் தொடரப்போகிறான்.
கதை சொல்லிக் கொண்டிருக்கும் சூனியனுக்கு மாற்றாக பா.ரா.வும் இந்தக் கதையில் நுழைந்து அவர் கொஞ்சம் கதைகளைச் சொல்லப் போகிறார்.
சூனியனைப் போலவே இன்னும் பல சூனியர்கள் கதையில் வரப் போகிறார்கள். அதில் ஒரு சூனியன் கோவிந்தசாமியை கைது செய்ய நீல நகரத்துக்குள் நுழைந்து விட்டான்.
நகரத்து பிரஜையாக அங்கீகாரம் பெற்ற கோவிந்தசாமிக்கு உடலில் ஏற்பட்ட வித்தியாசமான மாற்றங்களுக்கான காரணம் இன்னும் கதையில் சொல்லப்படவில்லை.
இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் சாகரிகா என்ன செய்து கொண்டிருப்பாள்? கோவிந்தசாமியிடம் இதோ வருகிறேன் என சொல்லிவிட்டு போடும் சாசரிகாவின் தோழி எங்கு சென்றாள்?
இத்தகைய குழல்கள் மற்றும் கேள்விகளுக்கு நடுவில் அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி