சூனியன் கோவிந்தசாமியின் நிழலை கொண்டே இயங்குகிறான். நிழலுக்கு குடியுரிமையும் பெற்று விட்டான். கோவிந்தசாமியோ தன் நிழலிழந்து ஷில்பா எனும் சாகரிகாவின் வழக்குறைஞரிடம் தன் தரப்பை கூறுகிறான்.
இதனிடையே நீண்ட நேரமாகியும் சூனியன் திரும்பாதது அவனது ஐயத்துக்கு இடமளிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் சூனியன் கோவிந்தசாமியின் நிழலோடு சென்று சாகரிகாவை சந்தித்து திரும்புவேனென்றவன் அவனது அனுமதியில்லாமல் நிழலுக்கு குடியுரிமை, சாகரிகாவின் சந்திப்பு என தனி ஆவர்தனம் புரிகிறான்.
நிழலோ பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கிறது. ஏற்கனவே நிழல் குடியுரிமை பெற்றதால், நிஜம் தனது ID ஐ பயன்படுத்த இயலாது தவிப்பதோடு பிறருக்கில்லாத பாத அமைப்பையும் பெறுகிறது.
பிரச்சனையை அறியச்சென்ற ஷில்பா “அந்தவிரல்களை” ரசித்துக்கொண்டிருக்கம்படி சொல்வது கொழுப்புடன் கூடிய பகடி.
சூனியனும் சிக்கலிலே உள்ளான். அவனை தேடி காவலர்கள் உள்ளே வந்தாயிற்று.
சூனியனுடனிருக்கும் நிழலா? ஷில்பா உதவும் நிஜமா? யாருக்கு வெற்றி?
மேலும் வாசிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.