ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது:
காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் . என் செல்போன் சிணுங்கியது.
“குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது.
எஸ்…இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங் … என்றேன் பெருமையாக.
“சார், We are calling from UCICI Brudancial Insurance company சார்…”
ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா? இறைவா, இந்த துயரத்திலேந்து மீளரதுக்கு ஏதாவது பாலிசி இருக்கா? – என்று நினைத்துக்கொண்டு, பதில் சொன்னேன்.
“இல்ல மேடம் …தேங்க்ஸ்”.
மணி 10.40 : Sir, we are calling from BDHC home loan .Loan கொடுக்கறோம் சார்.
வீடு ஏதாவது வாங்கற பிளான் இருக்கா சார்?
(ஆமாம் .இருக்கு.போயஸ் கார்டன்ல பத்து மாடி வீடு வாங்கணும், ஒரு அம்பது கோடி லோன் கெடைக்குமா ? ச்சே,என்ன ஒரு டிஸ்டர்பன்ஸ்)
“இல்ல மேடம்…தேங்க்ஸ்”.
மணி 11.50 : “Sir, we are from VXP Properties …மதுரந்தகத்துக்கு பக்கத்துல, உகாண்டாவில பிளாட் போட்டருக்கோம் . 30 minutes journey from NH road (ப்ளைட்’ லயா?) Free registration…Free site visit இருக்கு சார்.
(ஏன், ப்ரீ’யா எனக்கு ஒரு பிளாட்டும் வாங்கி கொடுத்துடுங்களேன்?)
“இல்ல மேடம்…தேங்க்ஸ்”
மணி 12.20 : சார்… ‘குட்டி பாங்க்’லேந்து பேசறோம்.பர்சனல் லோன் எதாவது வேணுமா சார்? நீங்க Payslip ,Pan card copy கொடுத்தா போதும் சார். அப்புறம் வீட்ட ஜப்தி பண்ற வரைக்கும் எல்லாத்தையும் நாங்க பாத்துப்போம். 10 Lacs வரைக்கும் தர்றோம் சார்.
“இல்ல மேடம்…தேங்க்ஸ்”.
மணி 1.15 : Lunch time .
“Sir ,We are calling from ‘Taxis bank’ credit card department.. இந்த மாசம் 12-ஆம் தேதி, நீங்க செலவு பண்ண 7,300 ரூபாய ,easy installment-ல, நாங்க 16,000 ரூபாயா மாத்தி தர்றோம்…
“இல்ல மேடம்…தேங்க்ஸ்”.
மணி 2.05: சிணுங்கிய போனை எடுத்த உடன் ,ஒரு நல்ல பாட்டு. அடடே..யார் இந்த மகராசி ? போன் பண்ணிட்டு அவங்களே பேசிட்டு இருக்காங்களே? அட..Recorded voice! “இந்த tune -அ உங்க காலர் ட்யுனா செட் பண்ண * மற்றும் 9-ஐ பிரஸ் செய்யவும். கட்டணங்களுக்கு உட்பட்டது” .
Cut ! ச்சே…என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
மணி 2.35: சார்..நாங்க … “அதோகதி பினான்ஸ் கம்பனி” லேந்து பேசறோம். ஒரு Systematic Investment Plan இருக்கு .நீங்க கொஞ்சம் கொஞ்சமா, மாசா மாசம் பணம் போட்டா போதும். நாங்க அத அஞ்சு வருஷத்துல பாதியாக்கி தர்றோம்.
“இல்ல சார்…தேங்க்ஸ்”.
மணி 3.45 : மறுபடி செல் ஒலித்தது. எடுத்தால் மீண்டும் ஒரு pre-recorded voice.
”Fish TV presents exciting recharge offer.168 Channels –south package 160 Rupees” என்று அலறியது. (அடிங்…கொய்யால …பிச்சுபுடுவேன் பிச்சி..). Cut!
மணி 4.10 : ஒரு ஆண் குரல் போனில் அழைத்தது .
”சார், வி ஆர் கால்லிங் ப்ரம் ” குடாக் தஹிந்திரா பேங்க்” .
“Saving ஏதாவது பண்ற பிளான் இருக்கா?” (இல்ல… Shaving தான் பண்ணனும்.வந்து பண்ணி உடுவீங்களா?)
“இல்ல சார்…தேங்க்ஸ்”.
மணி 5.20 : பாயல் மந்தரம் இன்சூரன்ஸ் கம்பெனி calling… “நான் ஏற்கனவே சொல்லிட்டனே ..எனக்கு வேணாம்.
இல்ல மேடம்…தேங்க்ஸ்”.
மணி 5.55 : கார் இன்சூரன்ஸ் தேவைப்படுமா சார்?
(மொதல்ல கார் ஒண்ணு தேவை…வாங்கித்தரீங்களா?)
“இல்ல மேடம்…தேங்க்ஸ்”.
மணி 6.30: Back to home.
வீட்டுக்கு வந்து உக்காந்ததும் ,மனைவி கேட்டாள்.
“காபி சாப்படரீங்களா”
“இல்ல மேடம் ….தேங்க்ஸ்”
மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.
பின் குறிப்பு:
இந்த கொடுமயிலேந்து மீள,நான் பண்ண Idea என்னான்னா …. வர்ற எல்லா Marketing நம்பரையும் Save பண்றதுதான் .
ஒரு வாரம் வர்ற எல்லா இன்சூரன்ஸ் காலையும் Reject பண்ணிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்தினேன்….அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
வெட்ட வெட்ட முளைக்கற அசுரன் மாதிரி, வேற நம்பர்லேந்து போன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கய்யா …
நொந்து நூடுல்ஸ் ஆன இந்த நந்துவின் அட்வைஸ் என்ன தெரியுமா?
Free gift, குலுக்கல் gift – ன்னு, எந்த கடையும் ஒரு Form நீட்டினா, அலஞ்சிண்டு, உங்க மொபைல் நம்பர fill up பண்ணாதீங்கோ ! உங்களுக்கு கெடைக்கபோற பம்பர் பரிசு ,இந்த கொடும தான் !
இன்டர்நெட்- Social / antisocial network மற்றும் எந்த வெப் சைட்-லயும் மொபைல் நம்பர கொடுத்திடாதீங்க…
ஆனா ஒண்ணு….தப்பித்தவறி கூட ,TRAI சட்டப்படி ,”Do Not Disturb “ ல மட்டும் register பண்ணிட வேணாம். ஏன்னா…
அதுக்கு அப்புறம் தான் எனக்கு நெறைய Calls வந்துது !
என்னதான் தம்பி என்றாலும் இப்படிப்பட்ட மரண மொக்கைகளை நீங்கள் பப்ளிஷ் செய்யத்தான் வேண்டுமா.. முடியல சார்!
இது “மின்னல்வரிகள்” proprietor பாலகணேஷ் எழுதியது போலுள்ளது.
Hilarious. LOL !!!!!!
தலைப்பில் ஆரம்பித்து கடைசி வரை ஒரே கிண்டல்,கேலி.சும்மா சொல்லப்படாது உங்க தம்பி நன்னாவே எழுதறார்!
ஹா.. ஹா.. நல்லதொரு உரையாடல் சார்…
உங்களுக்கு இதெல்லாம் கூட காமெடியா இருக்கு சார். என்ன ஆச்சோ ஏதாச்சோ என்ற பதிலுக்காக பதறிக்கொண்டு ஒரு விஷயத்துக்காக காத்திருக்கும் போது இப்படி பட்ட போன் வந்த எப்படி இருக்கும் நினைத்து பாருங்க. செல்போனை ஒரே அடியில் சுக்கு சுக்க உடைக்கணும் போல இருக்கும். இதெல்லாம் தட்டிக்கேட்க யாருமே இல்லையா ? TRAI யினால் ஒரு பைசா பிரயோஜனமில்லை. தாங்கள் சொன்னது போல் Do not Disturb என்றால் கஸ்டமரை அதிகம் தொல்லை செய்யலாம் என்ற அர்த்தம் போல.
கம்பனுடைய தம்பி வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமா? ஹிஹி…
You can defintely register in Do not Disturb and if the call comes again, you can catch your service provider. I am sure your call will stop…
But Had they not called you likethis, we would not have had a good conversation 🙂