எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.
என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தான்.
ஃபேஸ்புக்குக்குப் புதிதாக நுழைந்த தனது முதல் நாள் அனுபவத்தை அவன் எழுதியிருந்த விதம், அவனுக்குள் ஓர் எழுத்தாளன் இருப்பதை எனக்குச் சொன்னது. தூண்டிவிட்டோ, ஊக்குவித்தோ உருப்படுகிற ஜாதியில்லை. எனவே நான் ஏதும் சொல்லப் போவதில்லை. என்றாவது அவனுக்கே அது தோன்றும். அன்று ஒரு நல்ல ரைட்டர் பிறப்பான்.
அவன் அனுப்பிய பிடிஎஃப் கோப்பு கீழே இருக்கிறது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
பல இடங்களில் நகைச்சுவை மிளிர்கிறது. WriterJeNa வுக்கு வாழ்த்துகள்.
நல்லா இருக்கு சார் Flow……
Good .
இதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை சார். இந்த Facebook (முகநூல்) இருக்கே இது நிறைய பேரை பைத்தியமாக்கி இருக்கு. நிறைய பேரை அடிமையும் ஆக்கி இருக்கு. நிறைய பேரை அறிவாளியாவும் ஆக்கி இருக்கு. நிறைய பேர் வேலையையும் கெடுத்து இருக்கு. ஆனா உங்க சகோதரரை ஒரு எழுத்தாளராக்கி இருக்கு. அதான் விஷயம். ஒண்ணு தெரியுமா சார் எங்க அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் Facebook வலைதளம் தடை செய்ய பட்டுள்ளது. அந்த அளவுக்கு அதற்கு அடிமையான நிறைய staff உண்டு.
நல்ல வாசிப்பனுபவம் தந்த கட்டுரை. புலிக்கு தம்பி பூனையாகுமா.. ஒரு தேர்ந்த நகைச்சிவை கட்டுரை எழுத்தாளருக்கு சாற்றும் குறைவில்லாத திறமை எழுத்தில் மிளிர்கின்றது. தொடர்ந்து எழுதினால் விரும்பி வாசிக்கப்படுவார். வாழ்த்துக்கள்.
அருமையான எழுத்து. http://www.abdheen.blogspot.com எனும் தளத்தில் எழுதிவரும் எனக்கு தங்களைப்போல் ஒரு அண்ணன் இல்லாதது பேரிழப்பே.
ஏ.பி.தீன்: உங்கள் பெயர், வலைமுகவரியைப் பார்த்து ஒரு கணம் ஆபிதீனோ என்று குழம்பிவிட்டேன். அடையாளச் சிக்கல் அபாயம் உள்ளது. கவனியுங்கள்.
உங்கள் தம்பியாகபட்டவர் நிச்சயம் ஒரு புத்திசாலியாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. வல்லான் வகுத்ததே வாய்கால் என்ற கூற்றை பரிசோதிக்க வேண்டி அவர் அங்கே சென்று உள்ளார். அனேக மாக உள்ளீர்க்க பட்டு இருப்பார். வெகு விரைவில் twitteraiyum அனுபவிக்க சாத்திய கூறுகள் உண்டு. நிற்க : நான் facebookil அவ்வபோது வந்து போவது உண்டு, நிலையாக இருந்ததில்லை நிலையாமை தெளிவாக உள்ளதால்
சென்னையில் உள்ள VGP கோல்டன் பீச் வாசலில் ஒரு “சிரிக்கா மனிதர்” நின்று கொண்டிருப்பார். அவரை 20 வருடமாக எவராலும் சிரிக்க வைக்க முடிய வில்லை என்று சமீபத்தில் டிவி ஷோ ஒன்றில் சொன்னார்கள். இந்தக் கட்டுரையைப் படித்த பின், அவரால் கூட அப்படி இருக்க முடியாது. எழுத்தாளர் ஜக்குவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
Read your brother’s facebook entry experience. The piece is humorous, and of an easy flow. The contents reflect my opinion of facebook too. After the first flush of joining the facebook, I find that I’ve nothing to write, and I therefore just see others’ photos and their comments occasionally more to know how the world revolves around us! Congrats to your bro Jagannathan.
பாரா சார்,
உங்கள் தம்பிக்குக் காமெடி நன்றாக வருகிறது! தொடர்ந்து எழுதச் சொல்லவும்.
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
writer para: அதற்கென்ன ஏ.பி. என சுருக்கிக்கொள்ள வேண்டியதுதான். அடையாளமே இல்லாதவனுக்கு அடையாளச் சிக்கல் வந்தால் என்ன வராட்டி என்ன.
||பார்த்து ஒரு கணம் ஆபிதீனோ என்று குழம்பிவிட்டேன்.||
எனக்கும் ! 🙂
இந்த பதிவிற்கான தலைப்பை நீங்கள் மாற்றி வைத்திருக்கலாம்..
நானும் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன். உங்கள் தம்பி யை போல் வருவேனா?என் ப்ளாக்.http://puthiyaminnal.blogspot.in/
ற் கு பின் க் வரலாமா ? மற்ற படி காமெடி SUPER
சமீப காலமாக மிக வறண்டு போயிருக்கும் உங்கள் மணிப்பிரவாள மொக்கை எழுத்தைப் போலல்லாமல் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது இந்த கடிதம்.. ஏது ? உங்கள் தம்பி பெயரைச் சொல்லி நீங்கள் எழுதியது அல்லவே?
எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இல்லையே. எனக்கும் எழுதுவது எப்படி என்று சொல்லித் தாருங்களேன் ப்ளீஸ்!
//உங்கள் தம்பி பெயரைச் சொல்லி நீங்கள் எழுதியது அல்லவே?//
எனிக்கும் அதே சமசியம் உண்டு!
எனக்கும் அதே ஐயம் உண்டு!
I too doubt about it!
Your brother has very good humour sense.
நன்றாகவே இருக்கிறது…
Why blood same blood..
[…] ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது: […]
எழுத்துக்களில் அப்படியே உங்களது குறும்பு கொப்பளிக்கிறது. பட்டை தீட்டினால் படுஜோராக ஜொலிப்பார்.