அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 7)

தனக்கு வேண்டாம் என்ற ஒன்றை அவ்வளவு தெளிவாகவும், தைரியமாகவும் எடுத்து சொல்லும் நம் சாகரிகாவின் மீது பொறாமையாக இருக்கிறது. இந்த மனோதிடம் மட்டும் எல்லோரிடமும் இருந்துவிட்டால் எவ்வளவு உசிதமாக இருக்கும்.
மொழியறிவைக் கற்றுக்கொள்ள பிரஜையாக மாறினால் போதும் என்ற விதிமுறை பிரமாதம். மேலும் இந்த நகரில், மக்களிடையே எந்த ரகசியமும் இல்லை என்ற வழக்கமும் அழகு.
இந்த அத்தியாயத்தில் மொழி நடையும், சொற்கட்டமைப்பும் பிரமாண்டமாக அமையப்பெற்றிருக்கிறது. பாராவின் எழுத்துகள் மீது காதலும் கூடுகிறது. கதைக்களம் நகரும் வேகம் கதையின் மிகப்பெரிய பலமாய் இருக்கிறது.
கோவிந்தசாமியின் நிழலை விட்டு சென்ற நம் சூனியன் இப்போது அந்நகரத்துவாசியாகி விட்டான். உணர்ச்சிகளுக்கு அடிமையான கோவிந்தசாமி, நிதர்சனம் புரிந்த சாகரிகா, புத்திசாலியான நம் சூனியன் – இவர்களின் கதையை அழகாய் கொண்டு செல்லும் முற்போக்குச் சிந்தனை கொண்ட நம் எழுத்தாளர் என வாசர்கள்களுக்கு அனைத்துக்கும் கிடைக்கும் ஒரே இடமாய் இருக்கிறது கபடவேடதாரி!
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி