கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 12)

சாகரிகாவின் தோழியாக இருந்தாலும் ஷில்பா கோவிந்தசாமிக்கு உதவ முற்படுகிறாள். அவனை நீல நகருக்குக் குடிமகனாக்க உதவுகிறாள். ஷில்பாவின் உதவியுடன் அவன் அந்த நகரின் குடிமகனாகிறான். அந்த நகரத்தில் எளிதாகக் குடியுரிமையைப் பெற முடியும் என்பதால், அவனுக்குக் குடியுரிமை கிடைத்து விடுகிறது. குடியுரிமை பெறுவதற்கு வழக்கப்படி நடைபெறுவது தற்செயலாக மிகுதியாகிவிடுகிறது. அந்த மிகுதி ஷில்பாவைப் போல் நமக்கும் சற்றுக் குழப்பத்தைத்தான் தருகிறது.
முதலில் சூனியனை நம்பி அனுப்பிய கோவிந்தசாமி அதன்பின் சூனியன் மீது ஐயம் கொள்ளத் தொடங்குகிறான். தன் நிழல் தன்னை வந்து சேராதோ என்ற ஐயமும் அவனிடம் குடிகொள்கிறது. சிந்திக்காமல் செய்வதும் அதன் பின் சிந்திப்பதுமே அவனது வழக்கமாயிற்றே!.
நிழல் குடியுமை பெற்றதால் அவன் நீலநகரத்தின் தேசத்துரோகி ஆகிறான். ஷில்பா அந்நாட்டின் குடிமகள் இல்லை என்பதாலும் அவனுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்ற காரணத்தினாலும் அவனை விட்டு விலகுகிறாள். பல புதிய திருப்பங்களைச் சுமந்துள்ளது இந்தக் கதைச் சூழல்.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me