கோவிந்தசாமி நீலநகரத்தின் குடிமகனான பின்னர் அவனது சிந்திக்கும் திறன் மேம்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். இதுவரை பிறர் நிழலின் அறிவுரையைத் தனக்குள் செலுத்தி, செயல்பட்டு வந்தவன் தன் சிந்தனைக்கும் செவி சாய்த்து செயல்படத் தொடங்குகியுள்ளான். தன்னை விட்டு ஷில்பா சென்று விட்டாள் என்பதை உணர்ந்ததும் வெண்பலகை தன்னை ஏற்க என்ன செய்ய வேண்டும் என எண்ணி, அதற்காகச் செயல்படுகிறான்.
நீல நகரத்தில் வாழ்பவர்களுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல என்பதால் அவர்களின் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இலக்கண மாற்றம் கொள்ளும்படியாக அமைந்திருக்கிறது.
மனிதர்கள் எப்போதும் ஒரே முகத்துடன் வாழ்ந்தாலும் அவர்கள் வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு நபர்களிடம் பழகும் பொழுது பொய் முகமூடிகளை அணிந்து உரையாடுகிறார்கள். அவ்வாறே உரையாட வேண்டியதும் உள்ளது. இதில் தவறேதும் இல்லை. நம் கோவிந்தசாமியும் பல முகங்களைப் பெற்றுக் கொள்கிறான். அந்நீல நகரத்தில் எளிதாகக் கிடைப்பதால், அவற்றை அவன் பெற்றுக் கொள்கிறான். அதுமட்டுமில்லை, அவை அவனுக்குத் தேவையாகவும் இருக்கின்றன.
ஷில்பா சாகரிகா பரப்பும் பொய்யுரையைப் பற்றிக் கூறினாலும் அவள் எழுதுவதைத் தான் படித்த பின்புதான் முடிவுக்கு வர வேண்டும் என எண்ணுகிறான். அவனுடைய நிழலைப் போன்று செயல்படவில்லை. இந்த மாற்றத்தைக் கண்டு நான் வியந்தேன்.
பா. ராகவன் அவர்கள் இந்தப் படைப்பின் வழி மக்களுக்கு ஒரு செய்தியையும் முன் வைக்கிறார். பிற நாட்டு படைப்பாளிகளையும் விடுதலை வீரர்களையும் அறிந்து கொள்வதில் தவறில்லை. அதுபோல் நம் நாட்டில் உள்ளோரையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இந்த அத்தியாயத்தின் இறுதி வரி
அருமையாக
இருந்தது.