சூனியனுக்கு அவனுடைய பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்படி வலம் வந்து கொண்டிருக்கும் பாராவின் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பாராவைத் தேடிப் பிடித்து இரண்டாகக் கிழித்தெறிய விரும்புகிறான். சூனியன் யார் என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் நட்பு கொள்ளும் கோவிந்தசாமியின் நிழல் மீது சூனியனுக்கு நகைப்புத் தோன்றுகிறது.
சூனியன் தங்களுக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் ஒவ்வொருவரும் எந்தெந்த விதத்தில் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பதையும் கூறுகிறான்.
கோவிந்தசாமி மற்றொருவரின் பெயரில் கவிதையை எழுதி வெளியிட்டாலும் தன் இயல்பை அவனால் மறைக்க இயலவில்லை. சூனியனுக்கும் நிழலுக்கும் நடைபெறும் உரையாடலை உற்று நோக்கும் போது, சூனியன் நிழலுக்கும் கோவிந்தசாமிக்குமான இடைவெளியை மிதிகுயாக்குகிறானோ என்று தோன்றுகிறது. புகழ்ச்சியால் தன்னை இழக்கிறது நிழல்.
ஒரு செய்தி தவறோ, சரியோ அதை ஒரே குரலில் பலர் திரும்ப திரும்பக் கூறும் பொழுது அது சரியாகவோ தவறாகவோ கணிக்கப்படும். அதைச் சூனியன் வெண்பலகையின் வழியாக நீல நகரத்தின் மக்களுக்குக் கொண்டுசெல்கிறான். நிழலின் பல நிழல்கள் கொண்டு சூனியன் கச்சிதமாகச் செய்கிறான். அது இனி நிழலுக்குத் துணையாக இருக்குமா?
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.