மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் உருவாகின்றனர். மனிதர்களில் சிலர் காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புணர்கின்றனர். சிலர் காமத்தில் மீக்கூர்ந்த அன்பையும் காதலையும் இணைத்துப் புணர்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரும் ஒவ்வொரு வகையில் புணர்கின்றனர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் அன்பான அல்லது அன்பற்ற இணையைப் பொறுத்துதான் புணர்தலின் தன்மையும் வேறுபடும். இந்தச் சூனியர்களின் வாழ்வில் இதெற்கெல்லாம் இடமில்லை. அவர்களின் பிறப்பே முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.
பிறப்பறுக்கும் நிகழ்வும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. மனிதர்களுக்கு உள்ளது போன்று பிணைப்பு இல்லாததை வாசிக்க வாசிக்க என் மனத்தின் சொற்குரலானது காட்சியாக உருவெடுத்து விரிந்தது.
சாகரிகாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அவளின் எழுத்தும் நிழலின் சொல்லும் போதுமானதாக இல்லை என்பதால், அவளின் மூளைக்குள் இறங்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்று சூனியன் எண்ணுகிறான்.
தாவரங்கள் வெளியிடும் காற்று நம் உடலுக்குள் கலப்பது போல் அவளின் மூளையின் இடுக்குக்குள் சென்றால் மட்டுமே உண்மைத் தன்மையை அறிய முடியும் என்று நினைக்கிறான் சூனியன். அவளின் வழி தன் வழித்தோன்றலை தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணமும் மேல் எழுவது போல் உள்ளது.
மரணத்தைப் பற்றிக் கூறுவது தத்துவார்த்த நிலையாகும். பா. ராகவன் அவர்கள் இந்த இடத்தில் சிறு துளியைப் போன்று கூறியிருந்தாலும் படிப்போருக்கு அது மிகப் பெரிய நீர்நிலையாகவே தோன்றும்.
மனிதன் தன் பேச்சினால் தன்னை அறியாமலேயே தன் இயல்பை வெளிப்படுத்துவான். ஆகவே, சாகரிகாவின் மன உரையைப் பலகையில் காண்கிறான். உண்மை கலந்த பொய்யான உரையை அறிய தான் தேர்ந்தெடுத்த வழியே ஆகச் சிறந்தது என்று தோன்றுவதால், அவள் வீட்டிற்குச் சென்று, அவளைப் பார்க்கத் தொடங்குகிறான். புறம் நாம் அல்ல; அகம்தான் நாம் என்பதால், அவளுடைய அகத்தில் இறங்கி விட்டானோ சூனியன்!?.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.