தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.
விரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.
கணையாழி என்ற trail blazing இதழின் நிறுவனருக்கு எனது அஞ்சலி.
சுஜாதா பிரபல்யமாக இவரும் ஒரு காரணம். கண்ணீர் அஞ்சலி!
இதோ இப்போதும் கூட…. நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது மூச்சை நிறுத்திஉள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. .
http://tamilanveethi.blogspot.com/2011/05/blog-post.html
கணையாழி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு என் அஞ்சலி.
ஜெயமோகன் குறிப்பிடுவது போல, தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் கணையாழி வழியாகவே அறியப்பட்டார்கள்.
ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது கணையாழியில்தான்.
1. இன்று காலை’யில்’ காலமானார்
2. எனக்கும், என்னை போன்ற பலருக்கும் பேரிழப்பு
3.பெருமிழப்பு (?)
4.விரிவாக ‘எழுத’
5.’சிலருடைய’ மறைவு (?)
6. திருக்குறள் ஏற்காத கள்ளை அஞ்சலி ஏற்குமோ
இலக்கணித்திற்க்கும் நடைக்கும் சேர்ந்தோ அஞ்சலி?
–