சூனியன் பா.ரா.வின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். தான் ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் கதையை கொண்டுசென்று இருக்கையில் இந்தாள் வேறு குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்புகிறானே என கொதிக்கிறான்.
பா.ரா. கோரக்கரின் ஆள் என்பதால் அவரை அவனுக்கு இயல்பாய் பிடிக்காமல் போனது நியாயம்தான். அதற்காக தன்னையே படைத்தவனை தாறுமாறாய் பேசுவது என்ன நியாயம்?
உண்மையில் கோவிந்தசாமியின் மீது அவனுக்கு இருந்த கோபம் பா.ரா.வின் மீது திரும்பிவிட்டது போல. ஒரு பக்கம் சூனியன் சாகரிகாவை சரிகட்ட முயல இந்த கோவிந்தசாமி நான்கு புதிய முகங்களுடன் களத்தில் இறங்கியது மட்டுமன்றி கவிதைவேறு எழுதி வெண்பலகையில் பதிந்துவிட்டான்.
கடுங்கோபத்தில் சூனியன் செய்யும் அடுத்தடுத்த காரியங்களை கர்ப்பினிகள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.
கடைசியாக அவன் ஒரு பதிவைப் போட்டு அதை இருநூறு பேரை பகிர வைக்கிறான். அந்த இருநூறு பேரும் அவனே என்பதே சுவாரஸ்யம்.