கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 15)

சாகரிகாவை சந்திக்க செல்லும் சூனியன் அவளை எப்படியாவது கோவிந்தசாமியுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என நினைக்கிறான்.
சூனியனுக்கு அவள் மீது இச்சை இருப்பதை அவன் உணரும் இந்த அத்தியாயம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கலாம்.
சூனியர் உலகின் கருத்தரித்தல் நிகழ்வை அவன் விவரிக்கும் விதம் அருமை.
சாகரிகா கோவிந்தசாமியிடம் ஒருமுறைகூட உறவு கொண்டதில்லை என்பதை அவன் அறிகிறான். ஆனால் கோவிந்தசாமியின் மூளைக்குள் இருந்ததற்கு இது முரணாக இருப்பதை எண்ணிக்குழம்புகிறான்.
சாகரிகாவை அடையப்போவது யார்? கோவிந்தசாமியா? அவனது நிழலா? சூனியனா? பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவிந்தசாமியின் சில முட்டாள்தனங்களும் அதற்கு சாகரிகா கொடுத்திருந்த பதிலடியும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
Share

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds