தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும்.
சினிமா காரணமென்றால் வேறு யாராலும் முடியவில்லையே? பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் தொடங்கிவைத்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். ஆர். முத்துக்குமார் எழுதியுள்ள இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. டெல்லி முதல் ஈழம் வரை அவரது பக்கபலம் முக்கியம் என்று அனைவரும் தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.
உங்கள் கமென்ட் பாக்ஸே கமென்டிட தூண்டுகிறதே!
மற்றபடி பிளாக்கில் இப்போதே புத்தகம் கிடைக்குமா?
thanks for the information…. i am really eager to read it…
வாவ்! அட்டை படமும் வடிவமைப்பும் அசத்தல். இப்போதே படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.
//முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை.//
சட்டமன்றத் தேர்தலில் மட்டும் தோற்கடிக்க முடியவில்லை என்று சொல்லுங்கள். 80 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 86 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது.
ஆவலுடன் காத்திருக்கிறென். வாழ்க்கை வரலாறுகளை வெளியிடுவதில் கிழக்கு உண்மையிலேயே சாதனை புரிந்திருக்கிறது. உங்களுடைய அம்பானி, நாராயணமூர்த்தி, ஹிட்லர், மாவோ உள்ளிட்ட பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களை பற்றிய இந்தப் புத்தகத்தினை வாசிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீண்ட்நாளாய் எண்ணம். இப்போது நிறைவேறப் போகிறது என்று அறிய மிக்க மகிழ்ச்சி.
எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னதும் யுவகிருஷ்ணனுக்கு ஏன் கோபம் வருகிறது? பேசாமல் அவரை தளபதி ஸ்டாலின் பற்றி ஒரு புத்தகத்தை எழுதச் சொல்லி விடுங்கள். எல்லாம் சரியாகி விடும். புத்தகத்தைப் படிக்க மிக்க ஆவலாக இருக்கிறேன்.
வாத்தியார்னா எம்ஜியார் தான்யா! சூப்பர். ஆவலோடு எதிர்பார்க்கிறேன். (காதல் விவகாரங்கள் முழுசா இருக்குதுங்களா? அம்மா எத்தினி சேப்டர்ல வர்ராங்க? 😉
முத்துக்குமாரின் வைர வரிகளில் பொன்மனச்செம்மலைப் படிக்க காத்துக்கொண்டிருக்கிறோம்!
MGRன் சாதனைகளில் மிக முக்கியமனது, எந்த தமிழக அரசியல் வாதியைவிடவும் தன் காலத்திற்கு பின்
புத்தக பதிப்பாளாகளுக்கு வருமான திற்கு வழி செய்திருப்பது தான்
ரமணன்
வாத்யாரை விட எம்.ஜி.ஆர் நல்லாயிருக்கும்!
//சட்டமன்றத் தேர்தலில் மட்டும் தோற்கடிக்க முடியவில்லை என்று சொல்லுங்கள். 80 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 86 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது.//
யுவகிருஷ்ணா,
இந்தத் தகவல் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது
ஆர். முத்துக்குமார்