வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது.
சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன.
* ஆஸ்டின் இல்லம்
* தீண்டும் இன்பம்
* நில்லுங்கள் ராஜாவே
* மீண்டும் ஜீனோ
* நிறமற்ற வானவில்
தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம்.
அவ்வண்ணமே ஜெயமோகனின் சில புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.
* இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
* வாழ்விலே ஒருமுறை
* பனி மனிதன்
* நாவல் [கோட்பாடு]
சென்னை புத்தகக் கண்காட்சி நாளை மாலை தொடங்குகிறது. வாசகர்கள் அனைவரையும் கிழக்கு சார்பில் அன்புடன் அழைக்கிறேன். அடுத்த பத்து தினங்களைப் புத்தகக் கண்காட்சியில் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
பாவங்க… ஞாநி, சாரு எல்லோரும் கூட கெட்ட பதிப்பாளகிட்ட மாட்டி அவதிப்படறாங்கபோல… அவங்களையும் உய்வீங்களேன்!
இன்னிக்கு கொழுத்தியாச்சு! :))
கிழக்கு விட்டு வைத்துள்ளது திருவள்ளுவரையும் தொல்காப்பியரையும் மட்டும் தானா.
என்ன டாக்டர், எங்களுடைய திருக்குறள் உரை நீங்கள் பார்த்ததில்லையா? அவரையாவது விடுவதாவது?
Appreciate your steps taken to publish the books of legendary writer!
Great !!!!!!!!! launch of new books, we (wallet ) are waiting for new arrivals
With regards
Puthaga pithan