சென்னை தினத்தை ஒட்டி கிழக்கு பதிப்பகம் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளது. இது பற்றி ஹரன் பிரசன்னா அனுப்பிய விவரங்கள்:
O
கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு
நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்? இப்போது வரத் தொடங்கிவிட்டது. நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம். அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே...
இரண்டாம் பாகம் முற்றும்
நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.
மொட்டை மாடியில் ஞாநி
மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...
சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்
வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது – பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன். சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய...
மூன்று காப்பியங்கள்
தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப்...
என்ன ஊர்? சிங்கப்பூர்.
எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார். இதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில்...
சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்
வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன. * ஆஸ்டின் இல்லம் * தீண்டும் இன்பம் * நில்லுங்கள் ராஜாவே * மீண்டும் ஜீனோ * நிறமற்ற வானவில் தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம். அவ்வண்ணமே...