என்ன ஊர்? சிங்கப்பூர்.

எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார்.

இதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம்.

சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில் இருப்பினும் மாலையில் சற்று ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊர் சுற்ற முடியாவிட்டாலும் உட்கார்ந்து பேசவாவது. அல்லது சுற்றியபடியே கூடப் பேசலாம். சிங்கப்பூரில் வசிக்கும் இணைய நண்பர்களுக்கு நேரமும் விருப்பமும் வசதியும் இருப்பின் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். முடிந்தால் சந்திக்கலாம்.

இதே எடிட்டிங் பயிற்சி முகாம் அடுத்த வார இறுதியில் [மே 22,23 தேதிகளில்] மலேசியாவிலும் நடக்கிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.

சில சொந்தக் காரணங்களால் இடைப்பட்ட தினங்களில் சென்னைக்கு ஓடிவந்துவிட்டு, திரும்பவும் 21ம் தேதி மலேசியா போகிறேன். மலேசிய நண்பர்களையும் சந்திக்க விருப்பம். மின்னஞ்சல் செய்யுங்கள்.

சிங்கப்பூர் பயிலரங்கம் குறித்த விவரங்கள் இங்கு உள்ளன.

Share

5 comments

  • சென்னை/பெங்களூரில் இது போன்ற பயிலரங்கம் நடத்தும் எண்ணம் இருக்கிறதா?…

  • பாரா,
    உங்கள் அல்லது பத்ரிக்கு இந்த இரு நாட்களில் சிங்கையில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் எதுவும் உள்ளதா?
    அறியத்தரவும் அல்லது enmadal@yahoo.com க்கு மடலில் தரவும்,நன்றி.

  • Para Sir,
    Didn't visit this news for some time. I just missed you. You have given a short notice.

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me