நாளை மறுநாள் 26.7.2009 தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை 91.9 ஆஹா பண்பலை ரேடியோவில் [Aahaa FM-91.9] கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இது சினிமா நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு வாரமும் உருப்படியான ஒரு விஷயம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இதில் இடம்பெறும். கிழக்கு எழுத்தாளர்கள் பலர் பங்குபெறவிருக்கிறார்கள்.
முதல் நிகழ்ச்சியில் பங்கு வர்த்தகம் பற்றி சோம. வள்ளியப்பன் கலந்துகொண்டு பேசுகிறார். சென்னை நண்பர்கள் கேட்டுவிட்டுத் தங்கள் கருத்துகளை எழுதினால் நன்றி.
அடுத்தடுத்த வாரங்களில் இடம்பெறப்போகிற சப்ஜெக்டுகள் குறித்து விரைவில் எழுதுகிறேன்.
இது ஆஹா எஃப்.எம் – கிழக்கு பாட்காஸ்ட் குறித்த விளம்பரம். [உருவாக்கியது முகில்.]
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
ஆஹா… 🙂