கிழக்கு புத்தகக் கண்காட்சி

சில புதிய புத்தகங்கள் – 3 [அறிமுகக் கூட்டம் – அழைப்பு]

நாளை மறுநாள் திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.]

இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு – அறிமுகம் நடைபெறவிருக்கிறது.

திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி.

பத்ரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள வோல்ட்டேரின் கேண்டீட் குறித்த அறிமுக உரையை நிகழ்த்த இருப்பவர் மாலன்.

நாகூர் ரூமியின் சூஃபி வழி புத்தகத்தைப் பற்றி நான் பேசவிருக்கிறேன்.

செவ்வாய் அன்று லக்கி லுக்கின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் மற்றும் மருதன் எழுதிய மால்கம் எக்ஸ் புத்தக அறிமுகங்கள். பேசுவோர் சோம. வள்ளியப்பன், பா. ராமச்சந்திரன்.

புதன் கிழமை, என்னுடைய ஆயில் ரேகை பற்றி உருப்படாதது நாராயணனும் ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக் புத்தகம் பற்றி கல்கி எஸ். சந்திரமௌலியும் பேசுகிறார்கள்.

வியாழன் – இரா. முருகனின் நம்பர் 40, ரெட்டைத் தெரு குறித்து ஜே.எஸ். ராகவன், ராமதுரையின் விண்வெளி உள்ளிட்ட சில அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்தி பத்ரி சேஷாத்ரி.

வெள்ளி – குணசேகரனின் இருளர்கள்: ஓர் அறிமுகம், முகிலின் செங்கிஸ்கான் நூல் அறிமுகங்கள். நிகழ்த்துவோர்: பிரவாஹன், ஐகாரஸ் பிரகாஷ்

சனிக்கிழமை – சோம. வள்ளியப்பனின் ‘வாங்க, பழகலாம்’, ச.ந. கண்ணனின் ப்ரூஸ் லீ புத்தக அறிமுகங்கள். நிகழ்த்துவோர், எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ்.

இந்தப் பட்டியலை, சுலபமாகப் புரியும் விதத்தில் டேபுலர் காலமாக வெளியிடத்தான் நினைத்தேன். வலைத்தளத்தில் அதனை எப்படிச் சாதிப்பது என்று தெரியவில்லை. முயன்று பார்த்தால், இருக்கும் அளவைக் காட்டிலும் அகலமாகப் போய்விடுகிறது. தொழில்நுட்ப அறிவுக் குறைபாடு. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களையும் இந்த நிகழ்ச்சிகளுக்கு அன்புடன் அழைக்கிறேன். இந்த வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. கிழக்கு தொடங்கப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதல்முறை எங்களுடைய ஆசிரியர் குழு உறுப்பினர்களின் புத்தகங்களும் அறிமுகக் கூட்டங்களின் வழியே அறிமுகமாகின்றன.

நூலாசிரியர்களை நேரில் சந்திக்கவும் கலந்துரையாடவும் அனைவரும் வருக.

Share

9 Comments

 • நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்…!

  இதில் நான் அவதானித்த இன்னொரு விடயம், குறிப்பிட்ட எழுத்தாளர்களில் அனேகமானோர் இணையவெளியிலும் எழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

 • நிகழ்ச்சிகள் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம். சென்னையில் வலைப்பதிப்பாளர்கள் கூடினால் போண்டா நிச்சயமாய் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிழக்கு கூட்டங்களில் போண்டா உண்டா?;-) just kidding.

 • ஒலி (முடிந்தால் ஒளி) ரிக்கார்ட் செய்து வலையேற்றவும், குறிப்பாக ஜேஎஸ்ராகவன் மற்றும் நரேன் அறிமுகங்களை.

  வாழ்த்துகள்!

 • வெங்கட்ரமணன்,

  நன்றி. இப்படி டேபிள் போட முயற்சி செய்து ஒரு மணிநேரம் பாழ். எத்தனை அழகாகச் செய்திருக்கிறீர்கள்!

 • மிக நல்ல விஷயம்.

  உங்களின் investigate journalism மிகவும் பிடிக்கும்.

  அருமையாக எழுதியிருந்தீர்கள்.

 • New attempt,my best wishes.நானும் பங்கு கொள்ள ஆசைப்படுகிறேன்.

 • நானும் பங்குகொள்ள ஆசை.மகிழ்வித்து மகிழ் உடன் வாழ்த்துக்கள்.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி