இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.

சந்தேகமின்றி, கிழக்கு என் வாழ்வின் இரண்டாம் பாகம். சரியான இலக்கு, தெளிவான திட்டமிடல், சலிக்காத உழைப்பு, எடிட்டோரியலில் சற்றும் தலையிடாத நிர்வாகம் வாய்க்குமானால் எத்தனை விரைவில் பதிப்புத் துறையில் ஒரு பெரிய வெற்றியைக் காணலாம் என்பதற்கு கிழக்கு ஓர் உதாரணம். நூறு வருடங்கள் கடந்த நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன. எட்டு வருடங்களில் கிழக்கு பேசப்பட்டதுபோல் வேறு எந்த நிறுவனமும் பேசப்பட்டதில்லை. புனைவல்லாத எழுத்து என்னும் பிரிவில் நாங்கள் செய்து பார்த்த பரீட்சைகள் பெற்ற வெற்றிகள் மிகப் பெரியவை. பல தமிழ் பதிப்பாளர்களை இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவை. தாமும் செய்யலாமே என்று எண்ண வைத்தவை.

என் எண்ணங்களுக்கு பத்ரி அளித்த ஆதரவும் என் சகாக்கள் கொடுத்த ஒத்துழைப்புமே இதற்கு மூலக்காரணம்.

தனிப்பட்ட முறையில் எனக்குச் சில இலக்குகள் இருக்கின்றன. சில பொறுப்புகளும். அவ்வண்ணமே, இன்னும் கைப்பிடித்துச் செல்லும் பருவத்தில் கிழக்கும் இல்லை. ஒரு புயலாகத் தமிழ் பதிப்புத் துறையில் நுழைந்த கிழக்கும் தனது அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது. இட மாற்றம் என்னும் மிகப்பெரிய, சிக்கல் மிக்க பணியில் கிழக்கு இருந்தபோது இழுத்து மூடிவிட்டார்கள் என்றே பேசுமளவுக்கு நல்லவர்கள் நிறைந்த தேசமாக இது இருக்கிறது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இன்று புதிய அலுவலகத்துக்குச் சென்றேன். பழைய அலுவலகத்தைக் காட்டிலும் அழகாக, கச்சிதமாக இருக்கிறது. புத்தகக் கிடங்கும் புதிய முகவரிக்கு மாறியிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வழக்கமான துடிப்புடன் கிழக்கு இயங்கவே போகிறது.

அவ்வண்ணமே, நான் விலகுகிறேன் என்ற செய்தி பரவத் தொடங்கியதுமே, எனக்கும் பத்ரிக்கும் மூன்றாம் உலக யுத்தம் மூண்டுவிட்டதாகவும் பேசினார்கள். பதிப்புலகம், பத்திரிகை உலகம், மீடியா முழுதும் இது பேசப்பட்டபோது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. யோசித்துப் பார்த்தால், இந்த எட்டாண்டு காலத்தில் ஒருமுறைகூட நாங்கள் முறைத்துக் கொண்டதோ, சண்டையிட்டுக்கொண்டதோ இல்லை. அபிப்பிராய பேதங்கள் உண்டு. ரசனை மாறுபாடுகள் உண்டு. விருப்பங்களும் தேர்வுகளும் முரண்பட்டதுண்டு. அவை எதுவும் நட்புக்கு இடையூறாக இருந்ததில்லை. இன்று அலுவலகம் சென்றபோதுகூட இந்த வதந்திகளைப் பற்றித்தான் வெகுநேரம் பேசினோம். என் நோக்கங்களும் செயல்பாடுகளும் இலக்கும் அவருக்குத் தெரியும். அவரது இலக்கு எனக்கும் தெரியும். நான் இல்லாவிட்டால் கிழக்கோ, கிழக்கு இல்லாவிட்டால் நானோ பெரிய பாதிப்புக்கு உள்ளாகப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால்தான் இம்முடிவு.

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல நல்ல நண்பர்களைக் கிழக்கு எனக்குக் கொடுத்திருக்கிறது. சேல்ஸ் மானேஜர் மணிவண்ணன், மார்க்கெடிங் பிரிவில் பிரசன்னா, மணிகண்டன் ஆகிய மூவரைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். ரசனையும் ஆர்வமும் துடிப்பும் மிக்க இந்நண்பர்கள் பல சந்தர்ப்பங்களில் என் தினங்களை வண்ணமயமாக்கியிருக்கிறார்கள். ஒரு சிறு வட்டத்துக்குள் பேசப்பட்டுக்கொண்டிருந்த என் புத்தகங்களை மிகப்பெரிய வாசகர் வட்டத்துக்கு இவர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு சரியான எடிட்டர் என்றால் அவனுக்குள் முப்பத்தைந்து சதவீதம் ஒரு நல்ல விற்பனையாளனும் இருக்கவேண்டும் என்பார்கள். மக்களின் விருப்பத்தையும் விழைவையும் பொருட்படுத்தாமல், நான் கொடுப்பதே புத்தகம் என்று இருந்தால் ஒருபோதும் வெற்றி காண முடியாது. [இது படைப்பிலக்கியத்துக்குப் பொருந்தாத விதி.] அவ்வகையில் எனக்குக் களத்தில் மக்களின் விருப்பங்கள், தேவைகள், ஆர்வங்கள் எப்படி இருக்கின்றன என்று எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தவர்கள் இவர்களே.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திடீரென்று ஒரு நாள் – அது ஒரு டிசம்பர் மாதம் – ஒரு மாதத்துக்குள் உங்களால் ஹிட்லரைப் பற்றி ஒரு புத்தகம் தர முடியுமா என்று மணிவண்ணன் கேட்டார். என்றோ செத்த கெட்டவனுக்கு இன்றென்ன வாழ்வு என்று எனக்குப் புரியவில்லை. உண்மையில், பெரிய விருப்பம் இல்லாமல், வேறு யாரையும் எழுதச் சொல்ல அவகாசமில்லாமல் நானே எழுதி முடித்தேன். சொல்லி வைத்த மாதிரி அந்த ஜனவரி புத்தகக் கண்காட்சியில் பிசாசு வேகத்தில் விற்றுத் தீர்ந்தது அப்புத்தகம். இன்றுவரை என்னுடைய சூப்பர் செல்லர்களுள் அது முதல் மூன்று இடங்களில் நிற்கிற புத்தகம். நன்றி, மணிவண்ணன்.

ஹிட் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது சோம. வள்ளியப்பனையும் சொக்கனையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான புதிய எழுத்தாளர்களைக் கிழக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள். ஆனால் இந்த இரண்டு எழுத்தாளர்களும் ஒரு பத்திரிகையாளனுக்குரிய வேகமும் கூர்மையும் தீவிரமும் பெற்றவர்களாக அமைந்தது கிழக்குக்கு – குறிப்பாக, எனக்குக் கிடைத்த பெரிய வரம் என்பேன். எத்தனை கஷ்டமான சப்ஜெக்ட் என்றாலும் சரி. எத்தனை குறைவான கால அவகாசம் என்றாலும் சரி. அனைத்துப் பணிகளையும் தள்ளி வைத்துவிட்டு எழுத்தில் இவர்கள் காட்டிய தீவிரமும் அக்கறையும், நேர்த்திக்கு மெனக்கெட்ட பாங்கும் என்னால் மறக்க முடியாதவை. என்னைப் போலவே தொடக்க காலம் முதல் கிழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். என் பல யோசனைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர்கள். நான் நன்றி சொல்லவேண்டிய மாபெரும் பட்டியலில் முதலில் இருப்பவர்கள். இவர்கள் இருவரையும் நான் எப்படியெல்லாம் பாடு படுத்தியிருக்கிறேன், கடிந்துகொண்டிருக்கிறேன், மிரட்டி வேலை வாங்கியிருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்பால் கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையினால் மட்டுமே என்னோடு ஓடிவந்தவர்கள். நினைக்கும்போது நெகிழ்ச்சி மட்டுமே நிற்கிறது. இந்த இரண்டு பேருக்குச் சமமான ஆற்றல் மிக்க அபுனை எழுத்தாளர்கள் வருவார்களா என்பதுதான் ஒவ்வொரு புதிய ஆசிரியருடன் பணியாற்றும்போதும் என் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. நன்றி, இருவருக்கும் – மற்றவர்களுக்கும்.

இறுதியாக என் எடிட்டோரியல் நண்பர்கள். என்ன சொல்ல? ஒன்று சொல்லலாம். மருதன், முகில், முத்துக்குமார், கண்ணன் அளவுக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்கள் அநேகமாக இன்று தமிழ் பத்திரிகை உலகில் இல்லை. இயல்பான திறமையைப் படிப்படியாக வளர்த்துக்கொண்டு அமைதியாகச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தது என்னென்னவோ என்றாலும் எழுத்தார்வத்தால் இந்தத் துறைக்கு வந்தவர்கள். என்னை என் அத்தனை நிறைகுறைகளுடன் சகித்துக்கொண்டு, தொழில் கற்று, முன்னேறியவர்கள். இனி கைப்பிடித்து அழைத்துச் செல்ல அவசியமில்லை. அவர்களால் சுயமாக அனைத்தும் செய்ய முடியும். என்னை உருவாக்கி, ஆளாக்கியதில் என் ஆசிரியர் இளங்கோவனுக்கு எத்தனை பெருமிதம் இருந்திருக்கும் என்பதை இந்த நாலு பேரை நான் உருவாக்கியபோது மனப்பூர்வமாக உணர்ந்தேன். தெரிந்ததைச் சொல்லிக்கொடுப்பது ஒரு சுகம். சரியான மாணவர்கள் அமைவது கொடுப்பினை. நான் கொடுத்துவைத்தவன்.

கிழக்கின் முதல் ஊழியனாக, அதற்கு ஒரு முகமும் அகமும் வழங்கியதில் எனக்கு நியாயமான பெருமிதம் எப்போதும் இருக்கும். ஆனால் இதற்கு உறுதுணையாக இருந்த பத்ரிக்கும் பிற நண்பர்களுக்குமான எனது நிரந்தர நன்றிக்குப் பிறகுதான் அது.

அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலிருந்தும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. பதில் சொல்லச் சற்று அவகாசம் எடுத்துக்கொள்கிறேன். யோசிக்காமல் இல்லை. தீர்மானிக்காமல் இல்லை. என் மனைவி, மற்றும்  சில நெருங்கிய நண்பர்களுடன் விவாதிக்காமலும் இல்லை. சொல்வதற்கு மட்டுமே அவகாசம். இந்த சஸ்பென்ஸ் கூட இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது?

நன்றி, அனைவருக்கும்.

Share

68 comments

  • அடுத்த அத்தியாயமும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள் சார். இந்த பக்கத்தில எழுதறத நிறுத்திடாதீங்க. உங்களுடைய ‘மாய வலை’, ‘டாலர் தேசம்’ படிச்சி உங்க எழுத்தின் மேல ஆர்வம், எதிர்பார்ப்பு நிறைய எனக்கு.

  • வாழ்த்துகள்… புதிய முயற்சிகளுக்காக!

    எப்போ கெடா வெட்டுவீங்க? (சஸ்பென்ஸை எம்புட்டு நாள் தான் தாங்கிக்கிறதாம்?!)

  • அன்பின் பா.ராகவன்சார்…

    உங்களின் முன்றாம் பாகத்தில் நீங்கள் முற்றிலும் வெற்றியை ருசிக்க எல்லாம் வல்லபரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.

  • நேரடியாக நீங்கள் கற்றுக் குடுத்துவர்களைவிடுங்க.. தூர இருந்து உங்களைப் படித்துக் கற்றுக்கொண்ட என்னைப் போன்றோர்!! என்னிடம் உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேள்வி கேட்கும்போதெல்லாம் நான் யோசிக்காமல் இந்த நொடிவரை சொல்லிக்கொண்டு இருக்கும் முதல் பெயர் உங்கள் பெயர்தான். இதனாலேயே நான் இலக்கியவாதி லிஸ்டில் இல்லாமல் போனது ஒரு தனி சோகக்கதை 🙂

    கிழக்கில் இல்லாவிட்டாலும் புத்தக்கண்காட்சி சமயத்தில் கிழக்கு ஸ்டாலில் இருப்பீர்கள்தானே? நமது நடைபாதை வட்டமேசை மாநாடு உண்டுதானே?

    ”ஏன் எழுதமாட்டேங்குற? எதையாவது எழுதிக்கிட்டே இரு. அட்லீஸ்ட் ஏ,பி,சி,டியாவது” என்று ஒருமுறை நீங்கள் என்னிடம் சொன்னதை இப்போது உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் 🙂

  • நல்லது, புதிய சவால்கள்தான் வாழ்க்கையை ரசிக்க வைக்கும். கப்பல்கள் துறைமுகத்தில்தான் பத்திரமாக இருக்கும், ஆனால் கடலில் செல்வது தான் கப்பலின் வேலை, பத்திரமாக இருப்பது இல்லை. உலகம் சவால் நிறைந்தது, உன்னதமானது, அனுபவிக்க வேண்டியதும் கூட.

    உங்கள் எல்லா கனவுகளும் நனவாகட்டும். வாழ்த்துக்கள்

  • அப்பாடா..! பூனைக்குட்டி வெளில வந்திருச்சா..? இனிமே நாங்க கிசுகிசுவா இல்லாம நேரடி ரிப்போர்ட்டாவே இதைப் பத்திப் பேசலாம்..!

    வாழ்க பா.ரா.

    வாழ்க பத்ரி..

    வளர்க கிழக்குப் பதிப்பகம்..!

  • சிறந்த படைப்புகளுக்கு உங்களுக்கும் கிழக்கிற்கும் நன்றிகள் சார்.. அடுத்தடுத்த பரிணாமங்களில் தங்களை காண ஆர்வத்துடன் காத்திருக்கும் வாசகன்.

  • கிழக்கிற்கு நன்றி சொல்லி சூரியன் பிரிந்ததுன்னு சொல்லலாமா?

    எதுவாகிலும் புதிய திசைக்கு வாழ்த்துகள் சார்.

  • ஏறக்குறைய மதன் ஆனந்தவிகடனில் இருந்து வெளியே வந்ததைப் போலவே.

    இது போன்ற சமயங்களை விளக்க உதவும் கட்டுரையில் கோர்த்த வரிகள் ஒவ்வொன்றும் முத்து மாலை.

  • விலகி இருக்கும்போது அன்பு இன்னும் அதிகமாகும் என்று சொல்வார்கள்.அடுத்த பரிணாமத்தை காண ஆவல் கொண்டிருக்கிறோம் சார்..!சீக்கிரம் சொல்லுங்க…

  • இது எனக்கு பெரிய அதிர்ச்சி தான்..
    பா ராகவரை எனக்கு அறிமுகப் படுத்தியதே கிழக்கு தான்..
    விலகுவதற்கு தகுந்த விளக்கங்கள் அளிக்க வேண்டுகிறேன் …
    புத்தகம் எழுதுவதையாவது தொடர்வீர்களா ?? கிழக்கில் !! 🙁 🙁
    ————————————————————— இப்படிக்கு உங்கள் தொண்டன்

  • வாழ்த்துகள். மேற்சொன்னவர் சொன்னது போல கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் ஹாய் பாராவை எதிர்பார்க்கலாமா?

  • பல வருடம் இருந்த இடத்தைப், புரிதலோடு பிரியும் வரம் எவர்க்கும் வாய்ப்பதில்லை. உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

    நபநப.

    🙂

    இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்!

  • அன்புள்ள பா ரா

    உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த அத்தியாயமும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாய் அமையப் பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்
    ச.திருமலை

  • வாழ்த்துகள் சார்!! தங்களின் புதிய முயற்சிகள் வெற்றியடைய என் போன்ற வாசகர்களின் பேராதரவு எப்போதும் உண்டு!!!
    எங்களிடம் புத்தககாட்சியில் சொன்னது போல, (உங்கள் அடுத்த புத்தகம்) “சோவியத் நாட்டை பற்றியது” எப்போது வெளிவரும் என்று சொன்னால் மகிழ்வோம்.

  • தங்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  • சார்,
    2 தினங்களுக்கு முன்தான் எக்ஸ்செலன்ட் புத்தகத்தை படித்து முடித்தேன்.தங்கள் படைப்புகளை இன்னும் அதிக ஆர்வத்துடன் படிக்கப் போகிறேன்.
    இன்னும் நிலமெல்லாம் ரத்தம் படிக்கவில்லை.தங்கள் படைப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.என்னால் இன்னமும் நம்ப முடியவே இல்லை.

  • Two roads diverged in a yellow wood,
    And sorry I could not travel both
    And be one traveler, long I stood
    And looked down one as far as I could
    To where it bent in the undergrowth;

    Then took the other, as just as fair,
    And having perhaps the better claim,
    Because it was grassy and wanted wear;
    Though as for that the passing there
    Had worn them really about the same,

    And both that morning equally lay
    In leaves no step had trodden black.
    Oh, I kept the first for another day!
    Yet knowing how way leads on to way,
    I doubted if I should ever come back.

    I shall be telling this with a sigh
    Somewhere ages and ages hence:
    Two roads diverged in a wood, and I—
    I took the one less traveled by,
    And that has made all the difference

    – Robert Frost

  • அடுத்த அத்தியாயமும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள்.
    best wishes

  • MATHIRPPUKKURIYA PA RA AVARGALUKKU VANAKKAM, NANGAL ITHUVARAI KIZHAKU PATHIPAGATHAIYUM UNGALAIYUM THANI THANIYAGA NINAITHU KOODA PARTHATHU ILLAI.KIZHAKU ENDRATHUM MUTHALIL NINAIVUKKU VARUVATHU NEENGALTHAN, INI NEENGAL ILLATHA KIZHAKIL UNGAL IDATHAI YARUM NIRAPPA POVATHILLAI, NANGAL SOLLI UNGAL MUDIVUM MARAPOVATHILLAI,UNGAL MUDIVU ENGALUKKU PERUM VARUTHAM ALIKIRATHU.ETHU EPPADI IRUNTHALUM INI UNGAL PANI SIRAKKA VALTHUKKAL ….I FEEL SADLY

  • புதிய முயற்சியிலும் வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள்!
    -ஜெகன்

  • கிழக்கில் இனி நீங்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடியது. தனிப்பட்ட முறையிலும் இது எனக்குப் பெரும் இழப்பு.

    உங்களது அடுத்த பாகம் முந்தையதைக் காட்டிலும் வெற்றிகரமாக அமையும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

    கிழக்கைக் கடந்தும் நம் உறவு விரியும், செழிக்கும், வலுவடையும் என்னும் நம்பிக்கையுடன், மருதன்.

  • உங்களது வாழ்க்கை பயணத்தில் அத்தியாயங்கள் வேண்டுமானால் மாறலாம்.
    ஆனால் என்னைப் போன்ற நண்பர்களின் நட்பும் அன்பும் எப்பொழுதும் தொடரும்.

  • Getting out of comfort zone is the hallmark of any creator. Hope this madness continues and we readers are treated aplenty

  • ஏதோ நமது அலுவலகத்தில் பணிபுரிந்தவர் வேலையை விட்டுப்போகும்போது மனம் வலிப்பது போல் வலிக்கிறது.

    முதல் அத்தியாயம் – வார இதழ்கள்

    இரண்டாம் அத்தியாயம் – பதிப்பகத்துறை

    மூன்றாம் அத்தியாயம் – திரைத்துறை??? (சின்னத்திரை/வெள்ளித்திரை)

    கடந்த 20 நாட்களாக இணையத்தொடர்பில் இருந்து விலகி இருந்தது ஏன் என்று கூறவில்லையே சார்………….

    வாழ்க பாரா
    வளர்க பத்ரி

  • PaRa Sir,

    You should have great guts to quit a job from an organization which you have nurtured to a large extent. Hats off to you.
    My guess is you are going to start a publication…Am I right??
    Anyway we are always with you.

  • பா ரா , பத்ரி ,”பண்பாளர்” சத்யா, ஆர்.வீ ,க்ரிஷ் ,மணிவண்ணன் ,பிரசன்னா ,கிழக்கு புத்தகம் எல்லாம் பிரிக்க முடியாதவை பதிப்பக வரலாற்றில் மறக்கமுடியாத மைல் கல் உங்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு வரம்

  • புதிய அத்தியாயத்துக்கு வாழ்த்துகள் ! மதன் மலையேறப் போன மாதிரி திரைத்துறையில் (சின்ன/பெரிய) மட்டுமே இயங்காமல் அ-புனைவுகளிலும் உங்கள் பங்களிப்பு தொடரவேண்டும், வலைப்பதிவு, ட்வீட்டர் ஆகிய இடங்களிலும் உங்கள் பகிர்வு தொடரவேண்டும் என எல்லாம் வல்ல குரோம்பேட்டை/கோடம்பாக்கம் ஆண்டவர்களை வேண்டுகிறேன் !

  • நண்பர் திரு பாரா,

    திரு பத்ரி ஒரு சிறந்த தளபதியை இழந்திருக்கிறார்! அதனாலென்ன, உலகம் உருண்டை!
    எனினும் அந்தக்கால குரோம்பேட்டை கண்மணிகளின் சார்பாக புதிய முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!

    // மருதன், ……………. ,……………. ,………………. அளவுக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்கள் அநேகமாக இன்று தமிழ் பத்திரிகை உலகில் இல்லை.//

    The glorious general walks towards his destiny while the valiant king looks on! The Brave legionaries bend their heads and their swords both of which were always held high for the general. While the general knows such courage does not need a certificate when he is gone, the clown that cheered the tired general in midst of mind wrenching wars is the one that needs to be patted in front of others. For this clown will loose his place and his livehood for there are many that will replace him! Merciful is the general and clownish is the clown; pattings apart!!

  • எழுத்தால் கட்டிப்போடும் வித்தை அறிந்த தங்களைப்போல் எழுத்தாளர் கிடைத்தது தமிழ் வாசகர்கள் செய்த பாக்கியம். தாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் தங்களால் தான் அந்த இடம் பெருமையடையும். நிலமெல்லாம் ரத்தம் தொடரில் இஸ்லாமிய வரலாற்றை என் நண்பர்கள் சிலருக்கு படிக்க கொடுத்தேன். சில இடங்களை படித்தபோது சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஏன் என்று இன்று வரை புரியவில்லை. அது தங்கள் எழுத்தாற்றலின் சிறப்பு. தாங்கள் எதில் ஈடுபட்டாலும் அது பெரும் வெற்றியையும் அதன் மூலம் தங்களுக்கு பெருமகிழ்ச்சியும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். முக்கியமாக தாங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • சிந்தாமல் தின்பது எப்படி என்ற( புதிய தலைமுறை) கட்டுரையை அதிக அளவில் மற்றவர்களிடம் சிலாகித்து பரப்பிகொண்டிருந்த வேலையில் உங்களின் மூன்றாம் இன்னிங்க்ஸ் பற்றிய அறிவிப்பு!

    சில எனது யூகங்கள்!

    ஒரு பெரிய மீடியா உலகத்தில் பெரிய பொறுப்பில் மூன்றாம் இன்னிங்க்ஸ்!?
    இலக்கட்ட்ற ,முற்றிலும் சுதந்திர எழுத்துக்கள்தான் மூன்றாம் இன்னிங்க்ஸ்!?
    சினிமா உலகின் அதிகம் நுழைவது மூன்றாம் இன்னிங்க்ஸ்,?

    இல்லைஎனில்…..
    .
    .
    .
    .
    சோனியாவின் வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க அடுத்த மன்மோகன் என்ற இன்னின்க்சா ?!

  • Dear Para, Wishing you all the best in your future assignments. Hopefully you could continue to write in NHM or any other publications, and not go in a full time Cinema / News Channels.

  • ஒரு செண்டிமேண்ட் போட்டோ பத்ரி-பாரா கட்டித்தழுவல் பிண்ணனி கிழக்கு அலுவகம் போட்டு தலைப்பில் இனி மூன்றாம் அத்தியாயம் என்று போட்டிருக்கலாம்.மக்கள் என்னவாயிற்று என்ன இது என்று கேட்ட பின் சில நாட்கள் கழித்து வதந்திகள் ஒய்ந்த பின் கதையை சொல்லியிருக்கலாம்.எங்கிருந்தாலும் வாழ்க வளர்க என்பதை மட்டும் இப்போது சொல்லிக்கொள்கிறோம்.

  • அடுத்த அத்யாயமும் நீங்கள் விரும்பியபடியே அமைய என் வாழ்த்துகள்!

  • வாழ்த்துக்கள், பா.ரா.
    வாழ்க்கைச் சுவட்டின் மூன்றாவது அத்தியாயத்தைத் தொடங்கி பரிபூரண வெற்றி பெற என் ஆசிகள்.

  • படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது குருவே! (காற்றுவழிச் செய்திகள் எட்டும் தொலைவில் இல்லாததால் தாங்கள் சொல்லித்தான் அறிகிறேன்). திடமான காரணங்கள் இருக்குமென்பதை அறிவேன். அதேபோல் கிழக்கு தாங்கள் இல்லாமலும் இப்போது போலவே சிறப்பாக இயங்கும் என்பதும் புரிகிறது. ஆனாலும் கிழக்கின் ஆதி நாட்களிலிருந்து அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் பழகி வந்திருப்பதால் என்வரையில் இது ஒரு பெரிய மாற்றம். மூன்றாம் பாகம் வெகு சுவாரசியமாக இருக்குமென்பதை ஊகிக்க முடிகிறது. விவரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • அடுத்த திட்டம் ஏதானாலும் சரி………… நல்லதைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள். அதிலும் வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றேன்.

  • ”தலைமுறை”க்கும் சாதனை படைக்க வாழ்த்துகள் பாரா சார். உங்கள் கை வண்ணம் சொல் வண்ணமாக மீடியாவிலும் மிளிர திருநீர்மலை எம்பெருமான் அருள்புரியட்டும்.

  • சத்தியமாய் நம்பமுடியவில்லை. நீங்கள் இல்லாத கிழக்கில் இனி பெரிதாய் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. உங்களை ஒவ்வொரு புத்தக கண்காட்சியில் சந்திக்கும்போதும் பிரமிப்பாய் இருக்கும். இப்படி ஒரு திறமைசாலி இங்கே இருக்கிறாரே என்று நினைப்பேன். அதேசமயம் உங்கள் பொறுமையும் எளிமையும் எல்லோருடனும் பந்தாஅ இன்றி பழகும் பாங்கும் வியக்க வைக்கும். நிலமெல்லாம் ரத்தம் போன்ற ஒரு புத்தகத்தினை கிழக்கு இனி கனவிலும் நினைக்க இயலாது. காரனமின்றி நீங்கள் ராஜினாமா செய்திருக்கமாட்டீர்கள். எப்படி ஆனாலும் உங்களின் புதிய முயற்சிகள் மிகபெரிய வெற்றிப்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • நீங்கள் இதைவிட உயரே பறக்க டேக் ஆஃப் தொடங்கிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது. அண்ணாந்து பார்த்துக் குதூகலிக்க உங்கள் நலம் விரும்பிகள் நிறையவே இருக்கிறோம். கலக்குங்கள். குட் லக்.
    – ராமன் ராஜா

  • வாழ்த்துக்கள் பாரா.
    ஜெய விஜயீ பவ.
    பாரா போல இன்னொருத்தார் கிடைப்பாரா என்பது எங்கெங்கும் பிற்காலத்திலே ஒலிக்கும்.
    சந்தேகமே இல்லை.
    நாடிய பொருள் கைகூடும்.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  • அன்புள்ள ராகவன் சார்,
    கிழக்கிலிருந்து விலகினாலும்,அதன் mentor ஆக தொடரவும்.கிழக்கு தமிழ் சமூகத்தின் ஒரு வரம் அது ஒரு சமூக மாற்றத்தின் நிச்சிய அடையாளம்.பல ஆயிரக்கணக்கானவர்களின் அக கண்களையும்,அறிவுக்கண்களையும் திறந்திருக்கிறது.கிழக்கு தமிழ் சமூகத்தின் அறிவுசார் பொது சொத்து.பாரா வை படிப்பதை ஒரு பரமானந்த பரவசமாக கிழக்கு ஆக்கி இருக்கிறது. நீங்கள் விலகுவது ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு தான். நீங்கள் ஒரு நதி போல பொங்கி பிராவகித்து ஒடி செல்லும் இடம் எல்லாம் சிறப்பு செய்வீர்கள். நீங்கள் ஒரு 1000 தலைப்புகளில் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்து கொண்டு தமிழ் சமூகம் காத்துஇருக்க்ற்து. நீங்கள் எது செய்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு 1000%உண்டு.புதிய பயணம்,புதிய முயற்சி,புதிய இலக்குகள்,புதிய சாதனைகள்,மேன்மேலும் உயர்ந்து புதிய உயரங்களை தொட மனமார இறைவனை,என் அப்பன் முருகனை பிரார்த்திதுக்கொள்கிறேன்.best of luck sir,

  • உங்களை மீண்டும் எங்கே சந்திப்பது என்ற விவரங்களை, செய்தி & சூழ்நிலை சூடாக இருக்கும் பொழுதே கூறி விடுங்கள்.

  • ஹரன்பிரசன்னாவை பற்றி ஒரு வார்த்தையுமில்லையா…….

  • விகடன்,மணியன்,சாவி நினைவிற்கு வருகிறார்கள்.மேலும்
    சிறக்க வாழ்த்துக்கள்.

  • I really welcome your decision. This is the one I was looking from you for long time. I always say you were wasting your time being with a publishing company. You should be like a full time director but not just a editor for a movie. I appreciate your early decision. I always refer Madan’s decision of coming out of Vikatan. Please don’t attach yourself to cinema industry. Spend all your time towards writting novels which talks about you for long time.

  • புதுப் புத்தகத்தைப் பிரித்தவுடன் வருகிற ஃபிரெஷ்-ஷான வாசனை பிடித்ததாலேயே வாசிக்கத் தொடங்கியவன் நான்.விஷுவல் மீடியாவில் புதிதாக எந்தச் சேனல் வந்தாலும், புதிதாக எந்த நிகழ்ச்சி வந்தாலும் புத்தகத்தின் பரவச உணர்வு அதில் கிடைப்பதில்லை. விஷுவல் மீடியாவின் கவர்ச்சி வெறும் மாயை என்பதையும் மறக்காமல் முடிவெடுங்கள்,பாரா.

  • madan sir kuda oru dadavai vikatan vittu velliyae sendrar.Anallum avarudaya “kelvi pattilgal” vikatanil vandukondutan irrukindirna.suvayaga oru seidyai elluda vallavaranna neengal enda iddatil irundallum madikkapaduvirgal.

  • வாழ்த்துக்களும் , இச் செய்தியை நீங்களே முன்வந்து முன்பாக அறிவித்ததற்குப் பாராட்டுக்கள் பாரா.
    பாரா பாரா..ரைமிங்காக இருக்கிறதோ?!..
    🙂

    அநேகமாக ஒளி ஊடகத் துறை\திரைத்துறையில் அதிக அளவில் ஈடுபட விரும்புவீர்கள் என்று யூகிக்கிறேன்..

    நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி